ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் என்ஜினை உருவாக்கி, ஐசிஎஃப் தொழிற்சாலையில் இயக்கிப் பார்த்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில் என்ஜின்களைத் தயாரிக்க மத்திய ரயில்வேத் துறை ரூ. 2,000 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-இல் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிக்கும் பணி கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்புப் பணி நிறைவடைந்து சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
நாட்டிலேய முதன்முறையாக இந்த ஹைட்ரஜன் ரயில்கள், வடக்கு ரயில்வே கோட்டத்தில் உள்ள ஜிந்த் ரயில் நிலையத்துக்கும் சோனிபேட் ரயில் நிலையத்துக்கும் இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments