Recent Post

6/recent/ticker-posts

காமன்வெல்த் அவைத் தலைவர்களின் 28வது மாநாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் / Prime Minister Narendra Modi inaugurated the 28th Conference of Commonwealth Speakers and Presiding Officers


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.01.2026) புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்), தலைமை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்றங்களுக்கு இடையேயான யூனியன் தலைவர் டாக்டர் துலியா ஆக்சன், காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத் தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் கலிலா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 42 காமன்வெல்த் நாடுகள், 4 பகுதி அளவு தன்னாட்சி நாடாளுமன்றங்களைச் சேர்ந்த 61 அவைத் தலைவர்களும் (சபாநாயகர்கள்) தலைமை அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel