ஜெர்மனி பிரதமர் திரு பிரெட்ரிக் மெர்ஸ், 2026 ஜனவரி 12, 13 தேதிகளில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின்போது இந்தியாவும் ஜெர்மனியும் தொலைத்தொடர்பு ஒத்துழைப்புக்கான கூட்டு பிரகடனத்தில் கையெழுத்திட்டன.
இந்த கூட்டுப் பிரகடனத்தில் இந்திய அரசின் சார்பாக தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் திரு அமித் அகர்வால், ஜெர்மன் அரசின் சார்பாக இந்தியாவிற்கான ஜெர்மன் தூதர் டாக்டர் பிலிப் அக்கர்மேன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்தியப் பிரதமருக்கும் ஜெர்மனி பிரதமருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முக்கிய விளைவுகளில் ஒன்றாக இந்த பிரகடனம் கையெழுத்தானது.
இந்தியா-ஜெர்மனி இடையே, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை இந்தக் கூட்டுப் பிரகடனம் பிரதிபலிக்கிறது

0 Comments