ஹரியானாவில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான 'சிந்தன் ஷிவிர்' எனப்படும் சிந்தனையாளர் கூட்டம் நடைபெற்றது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடக்கி வைத்தார்.
இதில் சைபர் குற்றங்கள், பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிந்தனையாளர்கள் கூட்டம் நடக்கிறது. நாளை (29.10.2022) நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக பங்கேற்கிறார்.
தேசிய புலனாய்வு அமைப்பை திறம்பட மேலும் அவர்களின் அங்கிகாரத்தை திறம்பட செயல்படுத்த அனைத்து மாநிலங்களிலும் 2024க்குள் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்துள்ளோம்.
எல்லை தாண்டிய குற்றங்களை திறம்பட கையாள்வது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாகும் என்று கூறினார்.
உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டம், ஹரியாணா மாநிலம் சூரஜ்கண்ட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில், மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
காவல் துறையை நவீனமயமாக்குவது, சைபர் குற்ற மேலாண்மை, குற்ற நீதி முறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது, எல்லை மேலாண்மை, கடலோரப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் கடத்தலை முறியடிப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதத் தொடர்புகளை ஒழிப்பதில் அனைத்து மாநில அரசுகளும் பொறுப்புடன் செயல்பட்டுள்ளன. தீவிரவாதத்தை ஒழிப்பதில் நமது படைகளை, ஒருங்கிணைத் துக் கையாள வேண்டும்.
முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், தானியங்கி முறையில் நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் தொழில்நுட்பம், ட்ரோன் மற்றும் சிசிடிவி தொழில்நுட்பங்களில் பல மடங்கு முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மாநிலங்கள் புதிய விஷயங்களைக் கற்று, நாட்டுக்காக இணைந்து செயல்பட முடியும். நாடு முழுவதும் போலீஸாரின் அடையாளம் ஒரே மாதிரியாக இருந்தால், அது சிறந்ததாக இருக்கும் என கருதுகிறேன்.
இதற்கு, நாடு முழுவதும் போலீஸாருக்கு ஒரே மாதிரிான சீருடையைக் கொண்டுவரலாம். இது ஒரு யோசனைதான். இதை மாநிலங்களிடம் திணிக்க நான் முயற்சிக்கவில்லை. இன்னும் 5, 50 அல்லது 100 ஆண்டுகளில் இது சாத்தியமாகலாம். இதுகுறித்து சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
0 Comments