Recent Post

6/recent/ticker-posts

இலங்கையில் 22வது சட்டத் திருத்தம் நிறைவேறியது / 22ND ARTICLE AMENDMENT PASSED IN SRILANKA

  • இலங்கையில் கடந்த 2015ம் ஆண்டு சிறிசேனா அதிபராக இருந்தபோது அரசியல் சட்டத்தில் 19ஏ திருத்தம் கொண்டு வரப்பட்டது. 
  • அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க இந்த திருத்தம் வகை செய்தது. பின்னர், ஆட்சிக்கு வந்த கோத்தபய ராஜபக்சே, அந்த திருத்தத்துக்கு மாற்றாக 20ஏ திருத்தம் கொண்டு வந்தார். 
  • அதில், நாடாளுமன்றத்தை விட அதிபருக்கே கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. இலங்கையில் சமீபத்தில் நடந்த போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் அதிபர், பிரதமர் பதவிகளில் இருந்து விலகியதை தொடர்ந்து, அதிபரின் அதிகாரங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டது. 
  • அதை ஏற்று அரசியல் சட்டத்தில் 22-வது திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதாவை இலங்கை அரசு உருவாக்கியது. அதில், அதிபரின் சில அதிகாரங்கள் குறைக்கப்பட்டதுடன், நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. 
  • நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்த மசோதா மீது நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விவாதம் தொடங்கியது. இதன் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. இதில், 225 உறுப்பினர்கள் கொண்ட அவையில் 179 எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 
  • இதன் மூலம், அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது, அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவின் வெற்றியாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel