Recent Post

6/recent/ticker-posts

ரூ. 22,000 கோடியில் திட்டம் விமானப்படை விமானம் தயாரிப்பு - குஜராத் ஆலைக்கு மோடி அடிக்கல் / Rs. 22,000 crore project to manufacture Air Force aircraft - Modi lays foundation stone for Gujarat plant

  • நம் விமானப்படை வீரர்களின் போக்குவரத்துக்கு, 'ஆவ்ரோ 748' வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகை விமானங்கள், 1960களில் கொள்முதல் செய்யப்பட்டவை. 
  • இதையடுத்து, அந்த விமானங்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய நவீன போக்குவரத்து விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டது. 
  • இதற்காக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'ஏர்பஸ்' நிறுவனத்தின், 'சி 295' ரக விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.
  • மொத்தம், 21 ஆயிரத்து 935 கோடி ரூபாய் மதிப்பில், 56 விமானங்களை வாங்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. புதிய சகாப்தம்இந்த ஒப்பந்தப்படி, நான்கு ஆண்டுகளுக்குள், 16 விமானங்கள் நம் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. 
  • மீதமுள்ள 40 விமானங்கள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன. இதற்காக, 'ஏர்பஸ்' நிறுவனம், நம் நாட்டைச் சேர்ந்த, 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • இந்த விமான தயாரிப்பு தொழிற்சாலை, குஜராத்தின் வதோதராவில் உருவாகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 
  • இந்த நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 'டாடா சன்ஸ்' தலைவர் என்.சந்திரசேகரன், 'ஏர்பஸ்' நிறுவன தலைமை செயல் அதிகாரி குய்லாம் பவுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel