23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று அசத்தல் / U23 WORLD WRESTING CHAMPIONSHIP - AMAN SHERATH WON GOLD
ஸ்பெயினில் நடைபெற்று வரும் 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
இந்த போட்டியில் பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில் 18 வயதுடைய இந்திய வீரர் அமன் ஷெராவத், துருக்கியின் அகமத் துமன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 12-4 என்ற கணக்கில் துமனை வீழ்த்தி இந்திய வீரர் அமன் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார்.
இதன் மூலம் இந்திய வரலாற்றில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் தங்க பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அமன் ஷெராவத் பெற்றுள்ளார்.
0 Comments