கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு 24% உயர்வு - அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் / 24% hike in SC, ST reservation in Karnataka - Cabinet meeting approves
கர்நாடகாவில் வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பினரின் தற்போதுள்ள இட ஒதுக்கீட்டை உயர்த்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
அக்குழு ஆய்வு செய்து அரசிடம் கொடுத்த அறிக்கையில், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை வழங்கியது.
இந்நிலையில், பெங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இதில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் பழங்குடியின வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதம் என, இதுவரை இவர்களுக்காக இருந்த 18 சதவீத இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments