Recent Post

6/recent/ticker-posts

36-வது தேசிய விளையாட்டு போட்டி - 3வது நாள் / 36th NATIONAL GAMES TOURAMENT - 3rd DAY

  • நீச்சலில் ஆடவருக்கான 200 மீட்டர் பிரஸ்ட் ஸ்டிரோக் பிரிவில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த லிகித் 2:16.40 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். 
  • தமிழகத்தின் எஸ்.தனுஷ் (2:18.81) வெள்ளிப் பதக்கமும், சர்வீசஸ் அணியைச் சேர்ந்த சுதேஷ் (2:20.76) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். 
  • ஆடவருக்கான 3X3 கூடைப்பந்து இறுதிப் போட்டியில் தமிழக அணி 18-21 என்ற கணக்கில் உத்தரபிரதேசத்திடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
  • பளுதூக்குதலில் மகளிருக்கான 76 கிலோ எடைப் பிரிவில் தமிழகத்தின் ஆரோக்கிய அலிஸ் 206 கிலோ (89 117) எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். 
  • உத்தரப்பிரதேசத்தின் பூனம் யாதவ் 205 கிலோ (92 113) எடையை தூக்கி வெள்ளிப் பதக்கமும், பஞ்சாப்பின் ஹர்ஜிந்தர் கவுர் 204 கிலோ (89 115) எடையை தூக்கி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
  • ரோலர் ஸ்போர்ட்ஸில் ஆடவருக்கான ஆயிரம் மீட்டர் பிரிவில் தமிழகத்தின் அனந்தகுமார் வெண்கலப்பதக்கம் வென்றார். இன்லைன் ஃப்ரீஸ்டைல் ஸ்பீட் ஸ்லாலோம் பிரிவில் தமிழகத்தின் சர்வேஷ் வெள்ளிப்பதக்கம் வென்றார். ரிலேவில் தமிழகம் வெள்ளி வென்றது. 
  • ரோலர் ஸ்போர்ட்ஸில் மகளிருக்கான ஆயிரம் மீட்டர் பிரிவில் தமிழகத்தின் ஆரத்தி 1:39 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார். 
  • ரிலே பிரிவில் தமிழக மகளிர் அணி தங்கம் வென்று அசத்தியது. ஸ்கேட் போர்டிங் பார்க்கில் தமிழகத்தின் பி.கமலி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆர்டிஸ்டிக் ஸ்கேட்டிங் ஜோடி நடனத்தில் தமிழகம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.
  • மகளிருக்கான நீளம் தாண்டுதலில் கேரளாவின் நயனா ஜேம்ஸ் 6.33 மீட்டர் நீளம்தாண்டி தங்கம் வென்றார். உத்தரபிரதேசத்தின் ஷைலிசிங் (6.28) வெள்ளிப்பதக்கமும், கேரளாவின் ஸ்ருதி லட்சுமி (6.24) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel