Recent Post

6/recent/ticker-posts

36 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்திய ஜி.எல்.எஸ்.வி.- எம்.கே 3 / GSLV 3 LAUNCHED 36 SATELITES

  • எல்.வி.எம். - 3 என்பது இஸ்ரோவின் அதிக எடைக் கொண்ட ராக்கெட் ஆகும். முன்பு இந்த ராக்கெட் ஜி.எல்.எஸ்.வி.- எம்.கே 3 என்று அழைக்கப்பட்டது. 
  • இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த ஒன்வெப் நிறுவனம், அதிவேக இணைய சேவையை வழங்கும் வகையில், 36 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது. 
  • இதுதொடர்பாக ஒன்வெப் நிறுவனம் மற்றும் இஸ்ரோ இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 மணி ஏழு நிமிடங்களுக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, 36 செயற்கைக்கோள்களுடன், எல்விஎம் - 3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
  • பூமியில் இருந்து புறப்பட்ட 19 நிமிடங்கள் 15 வினாடியில், ராக்கெட் திட்டமிட்டபடி 601 கிலோமீட்டர் துாரமுள்ள புவி சுற்றுவட்ட பாதையில் ஐந்தாயிரத்து 796 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்த துவங்கியது. பின்னர் அடுத்த சில நிமிடங்களில் அனைத்து செயற்கைக்கோள்களும் திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.
  • இதன்மூலம் 'எல்விஎம் 3' ராக்கெட் முதல்முறையாக வணிக பயன்பாட்டுக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டின் உயரம் 43 புள்ளி 50 மீட்டராகும். இஸ்ரோ ஏவியதிலேயே மிகவும் அதிக எடைகொண்ட ராக்கெட் இதுவே ஆகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel