Recent Post

6/recent/ticker-posts

36வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் - 7வது நாள் / 36th NATIONAL GAMES - 7th DAY

  • 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் (நேஷனல் கேம்ஸ்) குஜராத்தின் 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. 
  • இந்நிலையில் சனிக்கிழமை ராஜ்கோட்டில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஹரியாணா 3-0 என தமிழகத்தை வீழ்த்தியது. 
  • கா்நாடக அணி 11-2 என்ற கோல் கணக்கில் குஜராத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உத்தரபிரதேச அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 5-4 என மேற்கு வங்கத்தை போராடி வீழ்த்தியது. அரையிறுதியில் மகாராஷ்டிரா-உ.பியும், கா்நாடகம்-ஹரியாணாவும் மோதுகின்றன. 
  • மகளிா் பிரிவில் ஹரியாணா-ஜாா்க்கண்ட், ம.பி.-பஞ்சாப் மோதுகின்றன. ஆடவா் ஜூடோ 81 கிலோ பிரிவில் தில்லியின் மொகித் ஷெராவத் தோள்பட்டை காயமுற்ற நிலையிலும் தங்கம் வென்றாா். 
  • சைக்கிள் தனிநபா் டைம் டிரையல் பிரிவில் கா்நாடகத்தின் நவீன் ஜான் தங்கம் வென்றாா். வாட்டா் போலோவில் ஆடவா் பிரிவில் சா்வீஸகும், மகளிா் பிரிவில் மகாராஷ்டிராவும் தங்கம் வென்றனா். 
  • யோகாசனத்தில் வைஷ்ணவிக்கு தங்கம்: யோகாசனம் ஆா்ட்டிஸ்டிக் பிரிவில் தமிழகத்தின் வைஷ்ணவி 134.22 புள்ளிகளுடன் தங்கமும், மகாராஷ்டிரத்தின் பன்ஸிலால் வெள்ளியும், பூா்வா கினாரே வெண்கலமும் வென்றனா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel