Recent Post

6/recent/ticker-posts

36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் - 9வது நாள் / 36th NATIONAL GAMES - 9th DAY

  • 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குஜராத் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கியது. சுமார் 33 அணிகள் இதில் பங்கேற்றன. இதில் தமிழகமும் பங்கேற்றது. 
  • ஆடவர் தனிநபர் ஹேங்கிங் பிரிவில் விழுப்புரத்தை சேர்ந்த ஹேமச்சந்திரன், 8.9 ஸ்கோரை பெற்று முதலிடம் பிடித்தார். இதே பிரிவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரர் ஒருவரும் 8.9 ஸ்கோரை எடுத்திருந்தார்.  இருவருக்கும் தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது. 8.75 புள்ளிகளை பெற்ற உத்தரப் பிரதேச வீரருக்கு வெண்கலம் கிடைத்தது. 
  • அதேபோல மகளிருக்கான தனிநபர் ரோப் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சங்கீதா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். மொத்தம் 9.05 ஸ்கோர் எடுத்திருந்தார் அவர். 
  • தேசிய விளையாட்டு 36வது சீசன் குஜராத்தில் நடக்கிறது. 20 வது நாளான கலப்பு 'ரிலே டிரையத்லான்' போட்டியில் தமிழக அணி பங்கேற்றது. 250 மீ., நீச்சல், 7.8 கி.மீ., சைக்கிளிங், 2.6 கி.மீ., ஓட்டம் என மூன்று விளையாட்டுகள் இணைந்தது. இதை ஒரு மணி நேரம், 59 நிமிட நேரத்தில் முடித்த தமிழக அணி, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது.
  • ஹரியானா தங்கம்பெண்களுக்கான ஹாக்கி பைனலில் இந்திய அணி கேப்டன் சவிதா, 'சீனியர்' ராணி ராம்பால் இடம் பெற்ற ஹரியானா அணி, பஞ்சாப்பை சந்தித்தது. இதில் ராணி ராம்பால் கோல் கைகொடுக்க, ஹரியானா அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் பெற்றது. 
  • ஆண்களுக்கான பைனலில் கர்நாடகா, உ.பி., மோதின. போட்டி 2-2 என சமனில் முடிந்தது. பின் நடந்த 'பெனால்டி ஷூட் அவுட்டில்' கர்நாடகா 4-3 என வென்று, தங்கம் கைப்பற்றியது.
  • பெண்கள் வாலிபால் அரையிறுதியில் கேரள அணி 25-20, 25-14, 25-19 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் மேற்குவங்க அணி 25-14, 25-21, 25-18 என ராஜஸ்தானை வீழ்த்தியது. 
  • ஆண்கள் கால்பந்து பைனலில் கேரளா, மேற்கு வங்கம் மோதின. இதில் மேற்கு வங்க அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.
  • பெண்களுக்கான குத்துச்சண்டை 'மிடில்வெயிட்' அரையிறுதியில் காலிறுதியில் அசாமின் லவ்லினா, குஜராத்தின் ருசிதா மோதினர். அபாரமாக ஆடிய லவ்லினா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். 
  • ஆண்கள் 'வெல்டர்வெயிட்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் முன்னணி வீரர், அசாமின் ஷிவா தபா, 2-3 என்ற கணக்கில் சர்வீசஸ் அணியின் ஆகாஷிடம் தோல்வியடைந்தார். 
  • பெண்கள் 'லைட்வெயிட்' பிரிவு அரையிறுதியில் பஞ்சாப்பின் சிம்ரன்ஜித் கவுர், 5-0 என அசாமின் பாசுமாட்டரியை வென்றார். 
  • தேசிய விளையாட்டில் தமிழக அணி 25 தங்கம், 21 வெள்ளி, 25 வெண்கலம் என, மொத்தம் 71 பதக்கங்கள் வென்று, பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 
  • முதல் நான்கு இடங்களில் சர்வீசஸ் 116 (54 தங்கம், 33 வெள்ளி, 29 வெண்கலம்), மஹாராஷ்டிரா 128 (34 தங்கம், 37 வெள்ளி, 57 வெண்கலம்), ஹரியானா 100 (32 தங்கம், 30 வெள்ளி, 38 வெண்கலம்), கர்நாடகா 87 (26 தங்கம், 23 வெள்ளி, 38 வெண்கலம்) உள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel