Recent Post

6/recent/ticker-posts

36-வது தேசிய விளையாட்டு போட்டியின் முடிவுகள் / RESULT OF 36th NATIONAL GAMES

  • 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது. இதில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
  • மொத்தம் 36 விளையாட்டு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. 14 நாட்கள் நடைபெற்ற இந்த விளையாட்டு திருவிழா முடிவடைந்தது. இதில் பதக்கப் பட்டியலில் சர்வீசஸ்அணி 61 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலம் என 128 பதக்கங்கள் குவித்து முதலிடம் பிடித்தது. 
  • மகாராஷ்டிரா 39 தங்கம், 38 வெள்ளி, 63 வெண்கலம் என 140 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், ஹரியாணா 38 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலத்துடன் 116 பதக்கங்களை பெற்று 3-வது இடமும் பிடித்தன.
  • கர்நாடகா 27 தங்கம், 23 வெள்ளி, 38 வெண்கலப் பதக்கம் என 88 பதக்கங்களுடன் 4-வது இடம் பெற்றது. தமிழகம் 25 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலத்துடன் 74 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் 5-வது இடம் பிடித்தது. 
  • கேரளா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முறையே 6 முதல் 10 இடங்களை பிடித்தன. 37-வதுதேசிய விளையாட்டு போட்டி கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel