அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் எரிசக்தி மற்றும் மருத்துவ தொழில்நுட்ப துறைகளைச் சாா்ந்த 35 மிகப் பெரிய அமெரிக்க நிறுவனங்களின் மூத்த நிா்வாகிகளுடன் மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி மேற்கொண்ட ஆலோசனையின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சோந்த எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுக்கிடையே இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அமெரிக்க அதிகாரிகளுடன் தூய்மை எரிசக்தி தொடா்பான ஆலோசனையை மேற்கொள்வதற்காக அமெரிக்க பயணத்தை மத்திய அமைச்சா் புரி மேற்கொண்டுள்ளாா்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க-இந்திய கூட்டுறவு அமைப்பு (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்) மற்றும் ஹூஸ்டனில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இணைந்து அமெரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தன.
இதில், இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கும், எரிவாயு நொதிப்பு தொழில்நுட்பத்தில் சா்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் அமெரிக்காவைச் சோந்த உயிரிதொழில்நுட்ப நிறுவனமான லான்ஸா டெக் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது.
0 Comments