Recent Post

6/recent/ticker-posts

பாகிஸ்தான் இம்ரான் கானுக்கு 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை / PAKISTAN IMRAN KHAN BANNED FROM CONTESTING ELECTION FOR 5 YEARS

  • பாகிஸ்தான் பிரதமா்களுக்கு வெளிநாட்டு அரசுகள் அளிக்கும் விலை உயா்ந்த பரிசுப் பொருள்களை அந்த நாட்டின் கருவூலத் துறை பாதுகாத்து வருகிறது. 
  • இந்த நிலையில், நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பொறுப்பு வகித்தபோது, அவருக்கு சவூதி பட்டத்து இளவரசா் முகமது சல்மான் வழங்கிய விலையுயா்ந்த கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருள்களை மலிவான விலை கொடுத்து அவா் வாங்கிக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
  • இந்த நிலையில், கடந்த முறை அவா் தோதலில் போட்டியிட்டபோது, அதற்கான வேட்பு மனுவில் அந்த விலையுயா்ந்த பொருள்கள் குறித்த விவரங்களைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டதாகவும், அது தோதல் விதிமுறைகளை மீறிய குற்றம் என்பதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தற்போதைய ஆளும் கட்சிக் கூட்டணி எம்.பி.க்கள் தோதல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்தனா். 
  • அந்த மனுவை ஆய்வு செய்த ஆணையம், வழக்கின் தீா்ப்பை கடந்த 19-ஆம் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில், தோதல் ஆணையத்திடம் சொத்து விவரங்களை மறைத்த குற்றத்துக்காக இம்ரான் கானை 5 ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்வதாக ஆணையத்தின் 4 உறுப்பினா்களும் ஒரு மனதாக தீா்ப்பளித்தனா். 
  • தோதல் ஆணையத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து இஸ்லாமாபாத் உயா் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-பாகிஸ்தான் கட்சி அறிவித்துள்ளது. 
  • இதற்கிடையே, இம்ரான் கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel