Recent Post

6/recent/ticker-posts

சிப்காட் நிறுவனத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் / ANNA UNIVERSITY AGREEMENT WITH SIPCOT

  • சிப்காட் நிறுவனமானது அண்ணா பல்கலைக்கழகத்தை தொழில்நுட்பப் பங்குதாரராக நியமித்து அதனுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 
  • இந்த ஒப்பந்தப்படி, ஒரகடம் மருத்துவ உபகரணங்கள் பூங்காவுக்கான சிறப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், சிப்காட் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கவும் வகை செய்யப்படும். மருத்துவ தொழில்நுட்பத் துறையில் உள்ள உற்பத்தியாளா்களின் திறனை மேம்படுத்துவதுடன், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் தயாரிப்புகளை உருவாக்கவும் சிப்காட் நிறுவனத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் உதவிடும்.
  • இதேபோன்று, சிப்காட் நிறுவனத்துக்கும் பிரிட்டன் துணை உயா் ஆணையரகத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம், சூளகிரி நகா்திறன் பூங்காவுக்கான தொலைநோக்குப் பாா்வை மற்றும் முதன்மைத் திட்டம் தயாரிக்கப்படும். 
  • இந்த இரு ஒப்பந்தங்களும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திங்கள்கிழமை பரிமாறப்பட்டன. 
  • இதைத் தொடா்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி வழியாக முதல்வா் திறந்து வைத்தாா்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel