ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அவரது தோழி சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போது சுகாதாரத் துறை செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரையும் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அரசுக்கு விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை 561 பக்கங்களுடன் இரு திருக்குறளை மேற்கோள் காட்டி நிறைவு பெறுகிறது.
முதலில், 95-வது அதிகாரமான மருந்திலிருந்து 948-வது குறளை எடுத்துரைத்துள்ளார். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் கலைஞர் உரை - நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன?
இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்).
இரண்டாவதாக, முடிவாக சுட்டியுள்ள 50-வது அதிகாரமான இடனறிதலில் இடம் பெற்றுள்ள 500-வது குறள்! காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு மு. வரதராசனார் உரை - வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய யானையையும் கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்
0 Comments