பிசிசிஐ தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, பொருளாளர் அருண் துமல் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிந்ததையடுத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.
முன்னாள் ஆல் ரவுண்டர் ரோஜர் பின்னி மட்டும் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். செயலாளர் பதவிக்கு ஜெய் ஷா மீண்டும் களம் கண்டார்.
இப்படி மற்ற பதவிகளுக்கும் ஒருவருக்கு மேல் யாரும் போட்டியிடவில்லை. இந்நிலையில், மும்பையில் நேற்று நடந்த 91வது வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் ரோஜர் பின்னி தலைவராகவும், ஜெய் ஷா மீண்டும் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஏற்கனவே பொருளாளராக இருந்த அருண் துமல் இப்போது பிரிஜேஷ் படேலுக்கு பதில் ஐபிஎல் போட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துமலுக்கு பதிலாக அவிஷேக் டால்மியா பொருளாளராகி உள்ளார்.
0 Comments