- சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.ஹெச்.,) சார்பில், ஹாக்கி போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
- 2021-22ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங் (சிறந்த வீரர்), ஸ்ரீஜேஷ் (சிறந்த கோல்கீப்பர்), பெண்கள் அணி கேப்டன் சவிதா (சிறந்த வீராங்கனை), வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சய், வீராங்கனை மும்தாஜ் இடம் பெற்றிருந்தனர்.
- உலகின் பல்வேறு ஹாக்கி அமைப்புகள், கேப்டன், பயிற்சியாளர்கள், வீரர்கள், ரசிகர்கள், மீடியாவை சேர்ந்தவர்கள் இணையதள வழியில் ஓட்டுப்பதிவு செய்து தேர்வு செய்தனர்.
- மொத்தம் பதிவான ஓட்டுகளில் 32.9 சதவீதம் பெற்ற இந்தியாவின் மும்தாஜ் 19, சிறந்த வளர்ந்து வரும் வீராங்கனையாக ('ரைசிங் ஸ்டார்') ஆக தேர்வு செய்யப்பட்டார்.
- ஜூனியர் உலக கோப்பை தொடரில் அதிக கோல் அடித்தவர்களில் மூன்றாவது இடம் பெற்றார் மும்தாஜ் (6 போட்டி, 8 கோல்). இதனால் 'ரைசிங் ஸ்டார்' விருதை தட்டிச் சென்றார்.
0 Comments