Recent Post

6/recent/ticker-posts

நாட்டிலேயே முதன் முறையாக கிருஷ்ணா நதி மீது கேபிள் பாலம் / Cable bridge over river Krishna for the first time in the country

  • நாட்டிலேயே முதன் முறையாக, கிருஷ்ணா நதி மீது ஆந்திரா தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களை இணைக்கும் விதத்தில், ரூ.1,082.56 கோடி செலவில் கேபிள் (கம்பி) பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சோமசீலா பகுதியில் தொடங்கும் இந்த கேபிள் மேம்பாலம், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம், ஆத்மகூரில் நிறைவடையும்.
  • பச்சை பசேல் என இருக்கும் வனப்பகுதிகள், கிருஷ்ணா நதியின் அழகு, ஸ்ரீசைலம் அணைக்கட்டு, மலைப்பகுதி என அனைத்தையும் ஒரே சமயத்தில் இந்த பாலத்தின் மூலம் கண்டு ரசிக்கலாம். 
  • மேலும், கோபுர வடிவ கேபிள்கள் இரவில் சிறப்பு மின் அலங்காரம் போன்றவையும் செய்யப்படும்.
  • இந்த பால கட்டுமானப் பணி முடிவடைந்தால், உலகிலேயே 2-வது கேபிள் பாலமாகவும், நாட்டிலேயே முதல் கேபிள் பாலமாகவும் பெயர் பெறும் என அமைச்சர் கட்காரி தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel