Recent Post

6/recent/ticker-posts

தேசிய குடிமக்கள் பதிவேடு (அசாம்) / NATIONAL REGISTER OF CITIZENS (AZZAM)

TAMIL
  • தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens (NRC) இந்தியக் குடிமக்கள் தொடர்பான பதிவுகள் உள்ளடக்கியது. 1951 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது அசாம் மாநிலத்தில் மட்டும் முதன் முறையாக தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்பட்டது. 
  • பின்னர் தேசிய குடிமக்கள் பதிவேடு அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படவில்லை.
  • டிசம்பர் 1971-இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போர், 1971 மற்றும் வங்காளதேச விடுதலைப் போரின் போது, ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்காளதேச மக்கள், இந்தியாவின் அசாம், மேற்கு வங்காளம், திரிபுரா, மேகாலயா போன்ற மாநிலங்களில் குடியேறினர். 
  • இந்திய அரசு மற்றும் அசாம் மாநில அரசு, அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்களுக்கு, இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை போன்ற அனைத்து உரிமைகளையும் வழங்கினார். 
  • இதனால் அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்களால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, சமூகப் பொருளாதரத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக உணர்ந்த அசாமியர்கள், வங்கதேசத்தவர்களை அசாம் மாநிலத்திலிருந்து வெளியேற்றக் கோரி அனைத்து அசாமிய மாணவர் அமைப்புகள் பெரும்போராட்டங்களும், வன்முறைகளும் மேற்கொண்டனர்.
  • அசாம் மக்களின் உரிமைகள் காக்கப்படவேண்டும், வெளிநாட்டினர் (வங்க தேசத்தவர்) வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடங்கப்பட்ட அசாம் கண பரிசத் கட்சி வென்று அசாம் மாநிலத்தில் 1985 முதல் 1989 மற்றும் 1996 முதல் 2001 இருமுறை ஆட்சி பொறுப்பேற்றது.
  • அசாமில் வெளிநாட்டவர் எனும் பிணக்கை தீர்க்க இந்திய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, அசாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை உச்ச நீதிமன்ற கண்காணிப்புடன் இந்திய அரசு 2013-இல் தொடங்கியது. 
  • 1951-ஆம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற்றவர்கள் அல்லது 1971-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவுக்கு முன்பாக இந்தியாவில் வசித்து, வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் மட்டுமே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
  • இதனால் வங்கதேசத்திலிருந்து அகதிகளாக அசாமில் வந்த மக்களில் இந்துக்கள் பலரின் பெயர் விடுபடுவதாக அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சியினர் கவலை தெரிவித்தனர். 
  • இதையடுத்து வெளிநாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்த்துக் கொள்வது என இந்திய அரசு முடிவெடுத்தது. இதற்கு அசாம் கண பரிசத் உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. 
  • வெளிநாட்டைச் சேர்ந்த அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என அந்த கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஏற்கெனவே இரண்டு முறை தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டன. 
  • இதில் லட்சக்கணக்கானோர் பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு 31 ஆகஸ்டு 2019 அன்று வெளியிடப்பட்டது.
  • அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்துகொள்ள 3,30,27,661 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 3,11,21,004 பேர்கள் மட்டும் பட்டியலில் உள்ளது. மீதமுள்ள 19,06,657 பேர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதால் அசாமில் சச்சரவு நிலவுகிறது.
ENGLISH
  • The National Register of Citizens (NRC) contains the records related to the citizens of India. The National Register of Citizens was maintained for the first time only in the state of Assam during the 1951 Indian Census. Later, the National Register of Citizens was not maintained in the state of Assam.
  • During the Indo-Pakistani War of 1971 and the Bangladesh Liberation War of December 1971, more than one crore Bangladeshis migrated to the Indian states of Assam, West Bengal, Tripura, and Meghalaya. 
  • The Government of India and the State Government of Assam gave the Bangladeshis settled in Assam all the rights like voting rights given to Indian citizens. Due to this, the Assamese felt that their employment, politics, education and socio-economics were being affected by the Bangladeshis who had settled in Assam, and all the Assamese student organizations started mass protests and violence demanding the expulsion of the Bangladeshis from the state of Assam.
  • The Assam Gana Parish Party, which was started with the demand that the rights of the people of Assam should be protected and the foreigners (Bangladeshis) should be expelled, won and took charge of the government in the state of Assam twice from 1985 to 1989 and from 1996 to 2001.
  • As directed by the Supreme Court of India to resolve the issue of foreigners in Assam, the Government of India started in 2013 the work of preparing a National Register of Citizens only in Assam under the supervision of the Supreme Court. 
  • It was decided that only those who were included in the National Register of Citizens in 1951 or who were residing in India before midnight on March 24, 1971 and were included in the electoral roll would be included in the National Register of Citizens.
  • The Bharatiya Janata Party of Assam expressed concern that the names of many Hindus who came to Assam as refugees from Bangladesh are missing due to this. Subsequently, the Government of India decided to include Hindus, Sikhs and Buddhists who came as refugees from abroad in the National Register of Citizens. 
  • Many parties including the Assam Gana Parishad also opposed this. Those parties have been demanding the expulsion of all foreigners. The draft list of the National Register of Citizens has already been published twice. It has been reported that the names of lakhs of people are missing. 
  • In this situation, Assam National Register of Citizens was published on 31 August 2019 as per Supreme Court order.
  • A total of 3,30,27,661 people had registered for registration in the Assam National Register of Citizens. Only 3,11,21,004 of them are in the list. There is a controversy in Assam as the names of the remaining 19,06,657 people are not included in the list.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel