Recent Post

6/recent/ticker-posts

நிர்மல் பாரத் அபியான் / NIRMAL BHARAT ABHIYAN

TAMIL
 • நிர்மல் பாரத் அபியான் என்பது 1999 முதல் 2012 வரை இந்திய அரசு மேற்கொண்ட முழுமைத் துப்புரவு பரப்புரை இயக்கம் (Total Sanitation Campaign) or TSC) ஆகும். 
 • இது சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு (community-led total sanitation) (CLTS) நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் திட்டம் ஆகும். இந்த இயக்கத்தை இந்திய அரசு 1999 இல் தொடங்கி வைத்த்து. 
 • இது குறைந்த அளவில் மட்டுமே மக்கள் பங்கேற்பு செய்து, ஓரளவு வெற்றிகண்ட நடுவண் ஊரகத் துப்புரவு திட்டத்தில் இருந்து உருவாகியது. 
 • முழுமைத் துப்புரவு இயக்கத்தின் முதன்மை இலக்க 2017 அளவில் பொதுவிடக் கழிப்பு நடைமுறையை ஒழித்துகட்டுவது ஆகும்.
 • சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு திட்டத்தில் கழிப்பறை கட்டும் நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவிடக் கழிப்பு நீக்கும் பண்பாட்டு வரன்முறைகள் மட்டும் திட்டமிடப்பட்டன.
 • இந்தத் திட்டம் மகாராட்டிரத்தில் தொடங்கப்பட்டபோது 200 ஊராட்சி மன்றங்கள் பொதுவிடக் கழிப்பை நீக்கி இதை நடைமுறைப்படுத்தின. இதை நடைமுறைப்படுத்திய ஊராட்சிகளுக்கு விருதும் பணப் பரிசுகளும் நிர்மல் கிராம் புரசுகார் திட்ட்த்தின் கீழ் நாளிதழ்களில் வழியாக பொதுமக்களிடம் பரவலான விளம்பரமும் தரப்பட்டன.
 • நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் பரப்பல் தூதுவராக வித்யா பாலன் பொறுப்பேற்றார்.
 • இத்திட்டமே 2014 அக்தோபர் 2 இல் காந்தி பிறந்த நாளில் தூய்மை இந்தியா இயக்கமாக (சுவாச் பாரத் அபியான்) மீளத் தொடங்கப்பட்டது.
நோக்கங்கள்
 • ஊரக வாழ்வின் பொதுத் தரத்தை மேம்படுத்தல்.
 • ஊரகத் துப்புரவு நடவடிக்கைகலை முடுக்கி, 2022 கால அளவில் இந்திய ஊராட்சிகள் அனைத்தையும் முழுமையான துப்புரவு நிலைக்கு உயர்த்தல்.
 • நலவாழ்வுக் கல்வியும் விழிப்புணர்வும் தந்து, ஊரக சமுதாயங்களையும் ஊரக நிறுவனங்களையும் நீடிப்புதிற துப்புரவு நோக்கி வளர்த்தெடுத்தல்.
 • அனைத்துக் கல்வி இயக்கம் வழியாக விடுபட்ட ஊரகப் பகுதி பள்ளிகளிலும் அங்கன்வாடிகளிலும் முறையான துப்புரவு ஏந்துகளை ஏற்படுத்தி மாணவர்களிடையே துப்புரவுக் கல்வி வாயிலாக துப்புரவி பழக்க வழக்கங்கலை உருவாக்கல்.
 • சுற்றுசூழல் காப்புடைய நீடிப்புதிற துப்புரவை மலிவான உகந்த தொழில்நுட்பங்கள் வழியாக உருவாக்கல்.
 • ஊரகப் பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மையைப் பேண, சமூக மேலாண்மை சுற்றுபுற துப்புரவு அமைப்புகளை உருவாக்கிடல், குறிப்பாக, திண்ம, நீர்ம கழிவு மேலாண்மையை உருவாக்கல்.
நடவடிக்கைகள்
 • வறுமைக்கோட்டின் கீழுள்ள வீடுகளுக்கு வீட்டுக்கொரு கழிப்பறை கட்டவும் வறுமைக்கோட்டுக்கு மேலுள்ள பட்டியல் சாதியினருக்கும் இனக்குழுவினருக்கும் வீட்டுக்கொரு கழிப்பறை கட்டவும் வீடுள்ள குறு, எளிய உழவர்களும் நிலமற்றத் தொழிலாளருக்கும் ஊனமுற்றவருக்கும் பெண் தலைமையுள்ள வீடுகளுக்கும் வீட்டுக்கொரு கழிப்பறை கட்டவும் உதவி அளித்தல்.
 • காந்தி அடிகள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிப்பாட்டுத் திட்டத்தோடு இணைந்து, அரசு கட்டிடங்களில் உள்ள பள்ளிகளிலும் அங்கன்வாடிகளிலும் துப்புறவு ஏந்துகலைக் கட்ட உதவி அளித்தல்.
 • துப்புரவு பொருள்களை செய்பவருக்கும் ஊரக துப்புரவு பொருள் அங்காடிகளுக்கும் சமூகத் துப்புரவு வளாகங்களைக் கட்டியமைக்கவும் நிதிநல்கை அளித்தல்.
 • நீடிப்புதிறத் துப்புரவு ஏந்துகளின் தேவைச் சிந்தனையை உருவாக்கும் தகவல், கல்வி, தொடர்பாடல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • நீடிப்புதிறத் துப்புரவுக்காகச் செயல்படும் ஊராட்சிகள், ஊரக நீர், துப்புரவுக் குழுக்கள், களப்பணியாளர்கள் ஆகியவற்றுக்கு மேம்பட்ட திறமைகளை வழங்கும் முறைகளை வளர்த்தெடுத்தல்.

ENGLISH
 • Nirmal Bharat Abhiyan is a Total Sanitation Campaign (TSC) undertaken by the Government of India from 1999 to 2012. It is a project that follows the principles of community-led total sanitation (CLTS). This movement was initiated by the Government of India in 1999.
 • It evolved from the mid-urban sanitation program, which had only limited public participation and was only partially successful. The primary goal of the Clean Up Movement is to eliminate the practice of public deductions by 2017.
 • No construction of toilets has been undertaken in the community-led Total Sanitation Project. Only cultural norms that eliminate public deductions were planned.
 • When this scheme was launched in Maharashtra, 200 panchayats implemented it by removing public deduction. The panchayats who implemented this were given awards and cash prizes under the Nirmal Gram Purasukhar Project and widespread publicity was given to the public through newspapers.
 • Vidya Balan has been appointed as the outreach ambassador of Nirmal Bharat Abhiyan.
 • This initiative was re-launched as Swachh Bharat Abhiyan (Swachh Bharat Abhiyan) on 2 October 2014, Gandhi's birthday.
Objectives
 • Improving the general quality of rural life.
 • Accelerate rural sanitation activities and raise all panchayats in India to complete sanitation by 2022.
 • Provide health education and awareness, develop rural communities and rural organizations towards sustainable sanitation.
 • Through the All Education Movement, establishment of proper cleanliness drives in deprived rural schools and Anganwadis and creation of cleanliness habits among students through cleanliness education.
 • Development of eco-friendly sustainable sanitation through cost effective technologies.
 • To maintain overall cleanliness in rural areas, develop community-managed environmental sanitation systems, particularly solid and liquid waste management.
Activities
 • Helping households below the poverty line to build one toilet and scheduled castes and ethnic groups above the poverty line to construct one toilet to house small and simple farmers, landless labourers, disabled and women headed households.
 • In association with the Gandhi Steps National Rural Employment Guarantee Scheme, assistance in construction of toilets in schools and Anganwadis in government buildings.
 • Providing financial support to cleaning product manufacturers and rural cleaning product stores to construct community sanitation complexes.
 • Conducting information, education and communication activities to create awareness of the need for sustainable cleaning solutions.
 • Develop systems that provide improved skills to panchayats, rural water bodies, sanitation teams and field workers working towards sustainable sanitation.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel