Recent Post

6/recent/ticker-posts

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் / OKKENAKKAL JOINT PROJECT

  • ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் என்பது தமிழக மக்களின் குறிப்பாக தர்மபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு முன்வைத்த ஒரு திட்டமாகும். 
  • இத்திட்டத்திற்கான மொத்தச் செலவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 13.34 பில்லியன் ரூபாய்களில் 12.4 பில்லியன் ரூபாய்களை ஜப்பானின் பன்னாட்டு கூட்டுறவு வங்கி வழங்க இருக்கிறது. 
  • மீதமான செலவை தமிழ்நாடு அரசு பொறுப்பேற்கும். இத்திட்டத்திற்கான அடிக்கல்லை தர்மபுரி, ஒகேனக்கலில் பெப்ரவரி 26, 2008 இல் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி நாட்டினார். 
  • இத்திட்டத்தினால் மூன்று நகராட்சிகளில் உள்ள 6,755 குடிமனைகள், 17 ஊராட்சிகள், மற்றும் 18 பேரூராட்சிகளில் உள்ள கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • மேலும் இத்திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீரில் புளோரைடு அதிகமாக இருப்பதை குறைத்து நீர் தூய்மைபடுத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel