Recent Post

6/recent/ticker-posts

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுத் திட்டம் / PRADHAN MANTRI JEEVAN JYOTI BIMA YOJANA

TAMIL
  • பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுட் திட்டம் (PMJJBY) இந்திய அரசு உறுதுணையாக இருக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஆகும். 
  • இத்திட்டம் முதன்முதலில் 2015-ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட் உரையின் போது அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் பிப்ரவரி 2015-இல் அறிவிக்கப்பட்டது. 
  • பின்னர் பிரதமர் நரேந்திர மோதியால் 9 மே அன்று கொல்கத்தாவில் முறைப்படி துவக்கிவைக்கப் பட்டது. மே 2015 வரை இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் 20% மட்டுமே ஏதோ ஒரு வகையான காப்பீட்டைக் கொண்டிருந்தனர். இத்திட்டம் அந்த சதவிகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு துவக்கப்பட்டது.
  • பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டுட் திட்டம் - இல் வங்கிக் கணக்கு வைத்துள்ள, 18 முதல் 50 வரை நிரம்பியுள்ளவர்கள் சேரலாம். இதற்கு வருடாந்திர சந்தா ரூ.330. இந்தக் கட்டணத்திற்கு ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 
  • இந்தச் சந்தாக் கட்டணம் சந்தாதாரரின் வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே முன்கொடுத்த ஒப்புகையின் மூலம் எடுத்துக் கொள்ளப்படும். எந்த ஒரு காரணத்தினாலும் சந்தாதாரர் இறக்க நேரிட்டால் அவரது வாரிசு (Nominee) க்கு ரூ. 2 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
  • இத்திட்டம் பிரதமரின் ஜன் தன் திட்டதுடன் இணைக்கப்படும். ஆரம்பத்தில் பெரும்பாலான ஜன் தன் வங்கிக் கணக்குகள் பணம் எதுவும் கணக்கில் வரவு வைக்கப்படாத கணக்குகளாக இருந்தன. இத்தகைய திட்டங்களை இணைப்பதன் மூலம் பூச்சியம் நிதி உள்ள கணக்குகளைக் குறைக்க அரசு இலக்கு வைத்துள்ளது.
  • வங்கிக் கணக்குள்ள எவரும் இணைய வங்கிச் சேவையின் மூலம் அல்லது வங்கிக் கிளைக்கு நேரில் சென்று ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலம் வருடத்தின் எந்த காலத்திலும் இத்திட்டத்தில் சேரலாம்
  • Prime Minister Jeevan Jyoti Bhima Life Insurance Scheme (PMJJBY) is a life insurance scheme sponsored by the Government of India. The scheme was first announced in February 2015 by then Finance Minister Arun Jaitley during the 2015 Budget speech of the Government of India.
  • It was then formally inaugurated by Prime Minister Narendra Modi on 9 May in Kolkata. As of May 2015 only 20% of India's total population had some form of insurance. The scheme was launched to increase that percentage.
  • Pradham Mantri Jeevan Jyoti Bhima Life Insurance Scheme - 18 to 50 years old having bank account can join. Annual subscription for this is Rs.330. This fee is subject to GST. Exemption from paying tax. 
  • This subscription fee will be automatically debited from the subscriber's bank account through pre-authorization. In case of death of the subscriber due to any reason his heir (Nominee) Rs. 2 lakhs sum insured.
  • The scheme will be linked to Prime Minister's Jan Dhan scheme. Initially, most Jan Dhan bank accounts were non-deposited accounts. By combining such schemes, the government aims to reduce the number of poor accounts.
  • Anyone with a bank account can join the scheme at any time of the year through internet banking or by visiting a bank branch in person and filling a form.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel