Recent Post

6/recent/ticker-posts

கொல்கத்தா - அகர்தலா இடையே விரைவு ரயில் சேவையை தொடங்கினார் குடியரசுத் தலைவர் / President inaugurated express train service between Kolkata - Agartala

  • திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொல்கத்தா-அகர்தலா இடையேயான விரைவு ரயில் சேவையை முதல்வர் மாணிக் சகாவுடன் இணைந்து குடியரசுத் தலைவர் முர்மு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • அதேபோன்று, மணிப்பூரின் கோங்சாங் வரை செல்லும் சதாப்தி விரைவு ரயில் சேவையையும் முர்மு தொடங்கி வைத்தார். அதன்பிறகு, காணொலி காட்சி மூலம் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 
  • அசாம் மாநிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தேசிய நெடுஞ்சாலை, பெட்ரோலியம் இயற்கை எரிவாயு, ரயில்வே உள்ளிட்ட மத்திய அமைச்சகங்களின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு காணொலி மூலம் முர்மு அடிக்கல் நாட்ட உள்ளார்.
  • தேயிலை தோட்ட பகுதிகளில் மாதிரி அங்கன்வாடி மையங்கள், 100 மாதிரி மேல்நிலைப் பள்ளிகள், கவுகாத்தி அக்தோரி முனையத்தில் நவீன கார்கோ மையம் உள்ளிட்டவற்றையும் குடியரசுத் தலைவர் இன்று திறந்து வைக்கவுள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel