Recent Post

6/recent/ticker-posts

தேசிய உயர் கல்வித் திட்டம் / RASHTRIYA UCHCHATAR SHIKSHA ABHIYAN

TAMIL
  • தேசிய உயர் கல்வித் திட்டம் (Rashtriya Uchchatar Shiksha Abhiyan) என்பது இந்திய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தால் 2013-ல் தொடங்கப்பட்ட இந்தியாவில் உயர்கல்விக்கான முழுமையான வளர்ச்சித் திட்டமாகும். 
  • நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூலோபாய நிதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் மத்திய அரசால் துவக்கப்பட்டது. 
  • மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பகுதிகள் மூலம் மத்திய அமைச்சகத்தால் நிதி வழங்கப்பட்டு, மத்திய திட்ட மதிப்பீட்டு வாரியத்தின் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
  • இவ்வமைப்பு கல்வி, நிர்வாக மற்றும் நிதி முன்னேற்றங்களைக் கண்காணிக்கும். மொத்தம் 316 மாநில பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் 13,024 கல்லூரிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும்.
பின்னணி
  • இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமையான கல்விக் கொள்கைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. தொடக்கக் கல்விக்காக 2001-ல் தொடங்கப்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் இடைநிலைக் கல்விக்காக 2009-ல் தொடங்கப்பட்ட தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் கல்வி வளர்ச்சியில் சிறந்த மேம்பாட்டினைத் தந்தது. 
  • உயர்கல்விக்கான பல்கலைக்கழக மானியக் குழு வழக்கமான கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டு நிதிகளுக்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. 
  • பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் 12பி மற்றும் 2(எப்) பிரிவுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மத்திய நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான நிதி போதுமானது. 
  • இருப்பினும், 31 மார்ச் 2012 புள்ளி விவரப்படி, இந்தியாவில் உள்ள உயர்கல்வித் துறையானது 574 பல்கலைக்கழகங்கள் மற்றும் 35,539 கல்லூரிகளைக் கொண்டிருந்தது. 
  • இவற்றில் 214 பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்தின் 12பி-ன் கீழ் வரவில்லை. மேலும் 6,787 கல்லூரிகள் மட்டுமே 12பி மற்றும் 2(எப்)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
  • இதனால், மாநில அரசுகளால் நடத்தப்படும் அதிக எண்ணிக்கையிலான உயர் கல்வி நிறுவனங்கள், அவற்றின் சொந்த நிர்வாகத்தில் வரையறுக்கப்பட்டவை, கல்வி சீர்திருத்தங்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு போதுமான நிதி உதவி இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை. 
  • எனவே, 2012-ல் 12வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில/ஒன்றியத்தால் நிர்வகிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தனித் திட்டம் தேசிய வளர்ச்சிக் குழுமத்தினால் முன்மொழியப்பட்டது. இதற்கு அமைச்சரவைக் குழு அக்டோபர் 2013-ல் ஒப்புதல் அளித்தது.
நோக்கங்கள்
  • தேசிய உயர் கல்வித் திட்டம் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் சமமான வளர்ச்சியை வழங்குவதையும், உயர்கல்வி அமைப்பில் உள்ள பலவீனங்களைச் சரிசெய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • 2017-ல் 12ஆவது திட்டத்தின் இறுதிக்குள் மொத்த உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 32% ஆக உயர்த்துவதே இதன் இலக்காகும். 
  • The National Higher Education Program (Rashtriya Uchchatar Shiksha Abhiyan) is a holistic development plan for higher education in India launched in 2013 by the Ministry of Education, Government of India. 
  • The scheme was launched by the central government to provide strategic funding to higher education institutions across the country. Funds are provided by the Union Ministry through the State Governments and Union Territories and the scheme is implemented with the coordination of the Central Project Evaluation Board. 
  • The system will monitor academic, administrative and financial progress. A total of 316 state public universities and 13,024 colleges will benefit under the scheme.
Background
  • Innovative educational policies introduced in India have met with tremendous success. The Education for All movement launched in 2001 for primary education and the National Secondary Education Program launched in 2009 for secondary education have brought great improvement in educational development. 
  • The University Grants Commission for Higher Education has provisions for regular innovation and development funds. Adequate funding for centrally funded universities and colleges recognized under sections 12B and 2(f) of the University Grants Commission Act. 
  • However, as of 31 March 2012 statistics, the higher education sector in India consisted of 574 universities and 35,539 colleges. Out of these 214 universities are not covered under Section 12B of the University Grants Commission Act. And only 6,787 colleges are registered under 12B and 2(F). 
  • Thus, a large number of higher education institutions run by state governments, limited to their own administration, have not been given adequate financial assistance to improve their facilities for educational reforms. 
  • Therefore, a separate scheme for State/Union administered Universities and Colleges was proposed by the National Development Corporation as part of the 12th Five Year Plan in 2012. This was approved by the Cabinet Committee in October 2013.
Objectives
  • The National Higher Education Plan aims to provide equitable development to all higher education institutions and address weaknesses in the higher education system. 
  • The target is to increase the overall higher education enrollment ratio to 32% by the end of the 12th plan in 2017.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel