Recent Post

6/recent/ticker-posts

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு / RISHI SUNAK BECOMES BRITISH PM

  • ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின. பிரதமர் பதவிக்கான போட்டியில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி அமைச்சரான இந்திய வம்சாவளி ரிஷி சுனக் ஆகியோர் இருந்தனர். 
  • நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட் (வயது 49) போட்டியிடுவதாக அறிவித்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார்.
  • எனினும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சில மணிநேரம் இருக்கும்போது, போட்டியில் இருந்து விலகும் முடிவை போரிஸ் ஜான்சன் அறிவித்தார். 
  • ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்றத்தில் 142 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. பென்னி மார்டண்ட் 100 எம்.பிக்கள் ஆதரவை இன்னும் பெறவில்லை. 
  • இங்கிலாந்து நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்குள் பென்னி மார்டண்ட் 100 எம்.பிக்கள் ஆதரவை பெற முடியாவிட்டால் ரிஷி சுனக் போட்டியின்றி பிரதமர் பதவியை கைப்பற்றி விடுவார்.
  • இந்த நிலையில், பென்னி மார்டண்ட்டிற்கு 100 எம்.பிக்கள் ஆதரவு கிடைக்காததால் அவர் பிரதமர் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. 
  • இதனால், இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமர் ஆக போட்டியின்றி தேர்வானார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel