Recent Post

6/recent/ticker-posts

மாநில அரசுகள் 'டிவி' சேனல் நடத்த தடை / STATE GOVERNMENT BANNED FROM RUNNING TV CHANNEL

  • மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் சார்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' 2012ல் ஒரு பரிந்துரை அளித்திருந்தது. 
  • இதில் அரசுகள், தனியார் துறையுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் அரசுகளால் நிதி அளிக்கப்படும் நிறுவனங்களை, தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுஇருந்தது. 
  • மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் அது தொடர்பான சேவை வினியோகத்தில் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது.
  • இதுவரை அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால், வரும் டிச., 31க்குள் அந்த நடவடிக்கையிலிருந்து, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். 
  • ஒளிபரப்பு நடவடிக்கைஏற்கனவே இதுபோன்ற ஒளிபரப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், இனிமேல் அவை, பிரசார் பார்தியின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க வேண்டும்.
  • மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிய சில ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் வாயிலாக, பிரசார் பார்தியின் கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே கொண்டு வரப்பட்டு உள்ளன. 
  • அரசியலமைப்புச் சட்டத்தின் 246-வது பிரிவின்படி, மத்திய அரசு மட்டுமே இதுபோன்ற விஷயங்களில் சட்டம் இயற்ற முடியும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel