பொதுமக்கள் யாரிடம் புகார் மனு அளிப்பது, எப்படி அளிப்பது என்ற சந்தேகம் நாள்தோறும் காவல்நிலையங்களுக்கு வரக்கூடிய சாமனியர்களுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது.
இதனை களையும் விதமாகவும் பொதுமக்கள் காத்திருப்பை தவிர்க்கும் விதமாகவும், தமிழகத்திலயே முதன்முறையாக மதுரை மாநகர ஆணையர் அலுவலகத்தில் (Grievance Redressal And Tracking System) GREAT திட்டம் தொடங்கப்பட்டது. இதனை மாநகர காவல் ஆணையர் செந்தில் குமார் தொடங்கிவைத்தார்
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட 21காவல்நிலையங்கள் மற்றும் 4 மகளிர் காவல்நிலையங்கள் என 25 காவல் நிலையங்களில் எழுத்தர் அறை பகுதியில் கணிணியுடன் கூடிய வரவேற்பு அறை பகுதி உருவாக்கப்பட்டு அதற்கான வரவேற்பாளரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் காவல்நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு நபரின் வருகைக்கான காரணம் குறித்த பெயர், தேதி, நேரம், மொபைல் எண், புகார் வகை, ஆதார் எண், காவல்நிலைய அதிகாரி உள்ளிட்டவற்றை வரவேற்பாளரிடம் கூறியவுடன் அதனை GREAT இணைய தளத்தில் பதிவிடப்படும்.
இந்த காவல்நிலைய வரவேற்பு அறை முன்பாக 360டிகிரியுடன், ஆடியோ பதிவுடன் கூடிய சிசிடிவி கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது.
0 Comments