தென்னக ரயில்வேயுடன் E-Toll Ads Media and Earth & Air நிறுவனம் இணைந்து முதல் முறையாக ரயில்களுக்கான "Your Platform" என்ற இதழை 2022 செப்டம்பர் 30ம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.
லைஃப்ஸ்டைல், ஃபேஷன் ஆகியவற்றிற்கான இதழ் இது. வழக்கமான இதழ்களையே படித்துவரும் பயணிகளுக்கு பயணத்தின்போது புதிதாக படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கான முயற்சி இது. இனிமேல் பயணிகள் தனித்துவமான விஷயங்களை படிக்க முடியும்.
பின்வரும் ரயில்களில், 2022 அக்டோபர் 1 (நாளை) முதல் இந்த இதழ் கிடைக்கும். இதுவொரு மாதாந்திர ஸ்மார்ட் இதழ். அச்சு மற்றும் டிஜிட்டல் இதழ்களுக்கு இடையேயான இடைவெளிக்கு பாலமாக இந்த இதழ் அமையும். ஒவ்வொரு பக்கத்திலும் கியூஆர் கோட் இருக்கும். அதை ஸ்கேன் செய்து டிஜிட்டலாகவும் படிக்கலாம்.
தென்னக ரயில்வே தொடர்பான கட்டுரைகள் இருக்கும். தென்னக ரயில்வேயின் மரபை அனைத்து பயணிகள் மற்றும் டிஜிட்டல் வாசகர்கள் புரிந்துகொள்ள இந்த இதழ் உதவும்.
ஒவ்வொரு மாத இதழிலும் ரயில்வேயை பற்றிய விஷயங்கள் அடங்கிய 4 பக்கங்கள் இடம்பெறும். அதில் புதிய அப்டேட்டுகளை தெரிந்துகொள்ளலாம்.
20 ஆண்டுகள் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த வி.பிரவீன் குமார், ஷங்கர் எம்.ஷிவ் மற்றும் கார்த்திக் பி.எஸ் ஆகியோர் இணைந்து இந்த இதழை நிறுவியுள்ளனர்.
வழக்கமான அரசியல், தினசரி, சர்ச்சை செய்திகள் இல்லாத புதிய மற்றும் நேர்மறையான கட்டுரைகளை படிப்பதற்காக இந்த இதழ் அறிமுகப்படுத்தப்படுகிறது.
In-Train இதழின் நோக்கம், அனுபவம், அறிவு மற்றும் பல விஷயங்களைப் பற்றிய விழிப்புணர்வை பரிமாறிக்கொள்ளக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதும், Your Platform மூலம் விளம்பரதாரர்கள் தங்களைத் தாங்களே விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான இடமும் ஆகும்.
பயணிகளை இணைக்க மற்றும் விளம்பரதாரர்கள் விளம்பரம் செய்வதற்கான புதிய வழியின் தொடக்கம் தான் இது.
0 Comments