அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது 'அப்போலோ' திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை கடந்த 1969ம் ஆண்டு அனுப்பி சாதனை படைத்தது.
அதன் பின், தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வைக்க ஆர்ட்டெமிஸ்-1 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஆர்டெமிஸ் ராக்கெட் முதல் முறையாக கடந்த ஆகஸ்ட் 29ம்தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால், விண்வெளி ஓடத்தின் 3வது இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு எரிபொருள் நிரப்புவதில் பிரச்னை ஏற்பட்டதால் விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு, 2வது முறையாக செப்டம்பர் மாதம் 3ம் தேதி மீண்டும் எரிபொருள் கசிவால் விண்ணில் ஏவுவது ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு காலநிலை சாதகமாக இருந்ததால், புளோரிடாவில் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 12.17 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
எரிபொருள் கசிவு ஏற்பட்டதால், அதற்கான அழுத்தம் குறைக்கப்பட்ட பிறகு, 45 நிமிடங்கள் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் செலுத்தப்பட்ட 8 நிமிடங்களுக்கு பின்னர், ராக்கெட்டின் மைய பகுதியில் உள்ள இயந்திரம் பிரிந்து தனியாக சென்றது.
0 Comments