Recent Post

6/recent/ticker-posts

பெங்களுரூவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் / Prime Minister inaugurated Terminal 2 of Kempegowda International Airport in Bengaluru

  • பெங்களுரூவில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தை  பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். விமான நிலையத்தின் 2-வது முனையத்தின் கட்டட அமைப்பு குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். 
  • கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் அமைய பெற்றுள்ள பல்வேறு அடிப்படை வசதிகளை பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். விமான நிலையத்தின் 2-வது முனையம் தொடர்பான ஒரு குறும்படத்தையும் பிரதமர் கண்டுகளித்தார்.
  • சுமார் ரூபாய் 5,000 கோடி மதிப்பில் பெங்களுரூவின் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையம்  உருவாக்கப்பட்டுள்ளது. 
  • தற்போது ஆண்டு ஒன்றுக்கு 2-5 கோடி பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த புதிய முனையம் மூலம், 5-6 கோடி பயணிகள் பயனடைவார்கள். அதாவது, சுமார் 2 மடங்கு பயணிகளின் போக்குவரத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 
  • “பூங்காவில் ஒரு பயணம்” என்ற கருப்பொருளின் நோக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாக, பூங்கா நகரமான பெங்களுரூவில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த 2-வது முனையம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை, கர்நாடக ஆளுநர் திரு தவார் சந்த் கெலாட் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel