Recent Post

6/recent/ticker-posts

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் 2022 / ASIA CHESS CHAMPIONSHIP 2022

  • இந்திய தலைநகர் டில்லியில் ஆசிய நாடுகளுக்கு ('கான்டினென்டல்') இடையிலான செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஓபன் பிரிவில் 92 பேர் பங்கேற்றனர். இதன் கடைசி, 9 வது சுற்று போட்டி நடந்தது. 
  • 8 சுற்று முடிவில் 6.5 புள்ளி எடுத்திருந்த இந்தியாவின் 17 வயது வீரர், பிரக்ஞானந்தா (தமிழகம்), சக வீரர் அதிபனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார் பிரக்ஞானந்தா.
  • இப்போட்டி 63வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. 8 சுற்றில் தலா 6.0 புள்ளிகள் பெற்றிருந்த இந்திய வீரர்கள் ஹர்ஷா, நாராயணன், ஷம்சுதீன், முரளி கார்த்திகேயன் தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர்.
  • இதையடுத்து 7.0 புள்ளி பெற்ற பிரக்ஞானந்தா, 'நம்பர்-1' இடம் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். தவிர, 2023ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கவும் பிரக்ஞானந்தா தகுதி பெற்றார். 
  • இந்திய வீரர்கள் ஹர்ஷா (6.5), அதிபன் (6.5) இரண்டு, மூன்றாவது இடங்களை பிடித்தனர். 
  • பெண்கள் பிரிவில் 50 பேர் களமிறங்கினர். இதையடுத்து ஒரு போட்டியில் கூட தோற்காமல், 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற நந்திதா (தமிழகம்), தங்கப்பதக்கம் கைப்பற்றினார். 
  • 2023ல் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றார். அடுத்த இரு இடங்களை பிரியங்கா (6.5), திவ்யா (6.5) பெற்றனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel