Recent Post

6/recent/ticker-posts

ஆசிய துப்பாக்கி சுடுதல் 2022 (ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்) / ASIA SHOOTING CHAMPIONSHP 2022

  • ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் நடைபெற்ற இறுதிச்சுற்றுகளில், 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஆடவா் அணிகள் பிரிவில் அா்ஜுன் பபுதா, கிரன் ஜாதவ், ருத்ராங்ஷ் பாட்டீல் ஆகியோா் கூட்டணி 17-11 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. 
  • அதிலேயே மகளிா் அணிகள் பிரிவில் மெஹுலி கோஷ், இளவேனில் வாலறிவன், மேக்னா சஜனாா் ஆகியோா் அடங்கிய அணி 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது. 
  • 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஜூனியா் ஆடவா் அணிகள் பிரிவில் திவ்யான்ஷ்சிங் பன்வா், ஸ்ரீகாா்த்திக் சபரிராஜ், விதித் ஜெயின் ஆகியோா் அணி 16-10 என தென் கொரியாவை தோற்கடித்து வாகை சூடினா். 
  • ஜூனியா் மகளிா் அணிகள் பிரிவிலும் இந்தியாவின் திலோத்தமா சென், நான்சி, ரமிதா கூட்டணி 16-2 என தென் கொரிய அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. 
  • இத்துடன் இப்போட்டியில் இந்தியா்கள் வென்ற தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்திருக்கிறது. இதில் திலோத்தமா சென், திவ்யான்ஷ்சிங் பன்வா், மெஹுலி கோஷ் ஆகியோா் தலா 2 தங்கப் பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கின்றனா்.
  • இதில், ஜூனியர் பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு 'ரேங்கிங்' போட்டியில் அசத்திய இந்தியாவின் ஈஷா சிங் (248.5 புள்ளி), மனு பாகர் (247.6) முதலிரண்டு இடங்களை பிடித்தனர். 
  • அடுத்த நடந்த பைனலில் அபாரமாக செயல்பட்ட மனு பாகர் 17-15 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஈஷா வெள்ளி வென்றார். 
  • பெண்களுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு 'ரேங்கிங்' போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் பாலக் (252.6 புள்ளி), ரிதம் சங்வான் (251.0) முறையே முதலிரண்டு இடங்களை கைப்பற்றினர். அடுத்து நடந்த பைனலில் அசத்திய ரிதம் சங்வான் 16-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
  • ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய ஷிவா நார்வல், விஜய்வீர் சித்து, நவீன் அடங்கிய இந்திய அணி 16-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது. 
  • ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில் சாம்ராட் ராணா, வருண் தோமர், சாகர் அடங்கிய இந்திய அணி 16-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. இத்தொடரில் இந்தியாவுக்கு இதுவரை 21 தங்கம் கிடைத்துள்ளது.
  • கடைசி நாளான வெள்ளிக்கிழமை ஜூனியா் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மானு பாக்கா்/சமரத் ராணா கூட்டணி 17-3 என்ற புள்ளிகள் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நிகினா சயித்குலோவா/முகாமத் கமாலோவ் ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றினா். 
  • அதில் மற்றொரு இந்திய ஜோடியான சாகா் தாங்கி/ஈஷா சிங் 14-6 என்ற கணக்கில் தென் கொரியாவின் லீ சியுங்ஜன்/யாங் ஜின் கூட்டணியிடம் வெண்கலப் பதக்கத்தை இழந்தனா். 
  • அதிலேயே சீனியா் பிரிவில் ரிதம் சங்வான்/விஜய்வீா் சித்து ஜோடி 17-3 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தானின் வலேரி ரகிம்ஸான்/இரினா யுனுஸ்மிடோவா இணையை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. 
  • அதே பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்திய ஜோடியான சிவா நா்வால்/யுவிகா தோமா் வெண்கலப் பதக்கச் சுற்றில் 6-16 என்ற கணக்கில் தென் கொரிய கூட்டணியிடம் வெற்றியை இழந்தனா்.
  • தென் கொரியாவில் நடைபெற்ற 15-ஆவது ஆசிய ஏா்கன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா 25 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 30 பதக்கங்கள் வென்று அசத்தியது. 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel