சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரராக ஒருவரை தேர்வு செய்து வருகிறது.
அந்த வகையில் அக்டோபர் மாத, சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தென் ஆப்ரிக்கா அணியின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
சிறந்த வீராங்கனைகளுக்கான விருது பரிந்துரை பட்டியலில் இந்திய மகளிர் அணியின் ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் தீப்தி சர்மா, பாகிஸ்தான் மகளிர் அணியின் நிதா தர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய வீரர் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதேபோல் சிறந்த வீராங்கனையாக பாகிஸ்தான் மகளிர் அணியின் நிதா தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
0 Comments