Recent Post

6/recent/ticker-posts

'கர்நாடகாவில் முதலீடு செய்யுங்கள் 2022' மாநாடு / INVEST IN KARNATKA 2022 CONFERENCE

TAMIL

  • 'கர்நாடகாவில் முதலீடு செய்யுங்கள் 2022' என்ற தலைப்பிலான முதலீட்டாளர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
  • சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியில் தடுமாற்றத்தில் இருந்தாலும், இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளது பெருமைக்குரியது.
  • பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அடித்தளங்கள் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு ஏதுவான சூழல் இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
  • இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. செமிகண்டக்டர் (சிப்) தயாரிப்பு மற்றும் தொழிநுட்பக் கட்டமைப்பு வாயிலாக இந்தியாவின் உற்பத்தித் துறை புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
  • தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், ஃபின்டெக், உயிரித் தொழில்நுட்பம், ஸ்டார்ட்-அப் மற்றும் நீடித்த எரிசக்தி ஆகியவற்றுக்கான தாயகமாக கர்நாடகா திகழ்கிறது. கர்நாடகாவின் வளர்ச்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளுக்குமே சவாலாக விளங்குகிறது.
  • பல்வேறு துறைகளில் இம்மாநிலம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதற்கு, கர்நாடகாவிலும் பாஜக ஆட்சி நடைபெறுவது முக்கியக் காரணமாகும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ENGLISH
  • Investors conference titled 'Invest in Karnataka 2022' started in Bengaluru yesterday. Inaugurating the conference through video, Prime Minister Narendra Modi said: International economists have reported that India is growing rapidly, even though many countries are in economic trouble.
  • The foundations for strengthening the economy continue to be built. An investor-friendly environment has been created in India.
  • A new chapter of development is being written in every sector in India. India's manufacturing sector has reached a new level with semiconductor (chip) manufacturing and technology infrastructure.
  • Karnataka is home to industrial, IT, fintech, biotech, start-ups and sustainable energy. The development of Karnataka is a challenge not only to other states of India but also to various countries.
  • BJP rule in Karnataka is the main reason for the rapid development of the state in various fields. Prime Minister Narendra Modi spoke thus.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel