Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவில் உள்ள செயற்கைக் கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளின் மேல்இணைப்பு மற்றும் கீழ் இணைப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2022-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Guidelines for Uplink and Downlink of Satellite TV Channels in India 2022

  • இந்தியாவில் உள்ள செயற்கைக் கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளின் மேல்இணைப்பு மற்றும் கீழ் இணைப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2022-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
  • தொலைக்காட்சி அலைவரிசைகளில் மேல் இணைப்பு மற்றும் கீழ் இணைப்புக்காக, டெலிபோர்ட்/ டெலிபோர்ட் ஹப்/ செய்தி சேகரிக்க டிஜிட்டல் முறையில் செயற்கைக் கோளைப் பயன்படுத்துதல் (டிஎஸ்என்ஜி) / செயற்கைக்கோள் வழியாக செய்தி சேகரிப்பு (எஸ்என்ஜி) / மின்னணு முறையில் செய்தி சேகரிப்பு (இஎன்ஜி) ஆகிய முறைகளுக்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள்/எல்எல்பி-க்கள், ஆகியவற்றுக்கும் இந்திய செய்தி முகமைகளின் மேல் இணைப்பு மற்றும் நேரலை நிகழ்வை தற்காலிகமாக மேல் இணைப்பு செய்வதற்கும் அனுமதி வழங்குவதை இந்த ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் எளிதாக்கும்.
முக்கிய அம்சங்கள்
  • புதிய வழிகாட்டு நெறிமுறைகள், தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான விதிமுறைகளை எளிதாக்கும்
  • நிகழ்வுகளின் நேரலை ஒளிபரப்புக்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டியதில்லை
  • இந்திய டெலிபோர்ட்டுகள் வெளிநாட்டு அலைவரிசைகளை மேல்இணைப்பு செய்யலாம்
  • தேசிய/ பொதுநலனில் ஒளிபரப்பு உள்ளடக்கத்திற்கு தார்மீக பொறுப்பை உருவாக்கும்
வழிகாட்டு நெறிமுறைகளை திருத்தி அமைத்திருப்பதால் ஏற்படும் முக்கிய பயன்கள்
  • அனுமதி வைத்திருப்போருக்கு எளிதாக இணக்கத்தை ஏற்படுத்தும்
  • வணிகம் செய்வதை எளிதாக்கும்
  • எளிமைப்படுத்துதலும், முறைப்படுத்துதலும்
  • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சமூக பொருத்தப்பாடுள்ள உள்ளடக்கத்தில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 30 நிமிடத்திற்கு அரசு ஒளிபரப்பு சேவையில் இருந்து நிறுவனங்கள்/ எல்எல்பி-க்கள் மேல் இணைப்பு மற்றும் கீழ் இணைப்பு பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel