ஜப்பானில் நடைபெற்ற இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் மனிஷா ராமதாஸ் ஜப்பானின் 'மமிகோ டொயோடா' வை 21-15, 21-15 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.
இதே தொடரில் இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆடவா் ஒற்றையா் எஸ்எல்3 பிரிவில் இறுதி ஆட்டத்தில் சக வீரா் நிதேஷ்குமாரை 21-19, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றாா் பிரமோத் பகத். அவா் பாராலிம்பிக் சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆடவா் இரட்டையா் எஸ்எல்3-எஸ்எல் 4 இறுதியில் இந்தோனேசியாவின் ஹிக்மத்-உக்குன் இணையிடம் 21-14, 18-21, 13-21 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்ந்த பகத்-மனோஜ் சா்காா் இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.
மனாஸி ஜோஷி, நித்யா ஸ்ரீ உள்ளிட்டோா் வெண்கலம் வென்றனா். மொத்தம் 2 தங்கம் உள்பட 16 பதக்கங்களைக் கைப்பற்றியது இந்தியா.
0 Comments