Recent Post

6/recent/ticker-posts

இந்திய – அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சியான யுத் அப்யாஸ் 2022 / YUDH ABHYAS 2022 - INDIA'S US JOINT MILITARY EXERCISE

TAMIL

  • இந்திய – அமெரிக்க 18-வது கூட்டு ராணுவப் பயிற்சியான “யுத் அப்யாஸ் 2022” உத்தராகண்டில் இம்மாதம் தொடங்கவுள்ளது. 
  • சிறந்த நடைமுறைகள்,  உத்திகள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பரிமாறிக் கொள்ளும் நோக்கத்துடன் இருநாடுகளின் ராணுவங்களுக்கிடையே இத்தகைய பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. முந்தைய பயிற்சி 2021 அக்டோபரில் அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்றது.
  • அமெரிக்க   ராணுவத்தின்  11-வது வான்படைப் பிரிவைச் சேர்ந்த  வீரர்களும் இந்திய ராணுவத்தின்  அசாம் படைப்பிரிவினரும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றனர். 
  • இந்தப் பயிற்சியின் போது, அமைதிக்காப்பு, அமைதியை நிலைநாட்டுதல் ஆகியவை தொடர்பான  செயல்பாடுகளும் இடம் பெறும். இந்தக் கூட்டுப்பயிற்சியின் போது மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் கவனம்  செலுத்தப்படும். 
  • இயற்கைச் சீற்றத்தின் போது, நிவாரண நடவடிக்கைகளை  விரைவாகவும், ஒருங்கிணைந்தும் செயல்படுத்துவதற்கான  பயிற்சியை இரு நாடுகளும் பெறவுள்ளன.
ENGLISH
  • The 18th Indo-US joint military exercise “Yud Abhyas 2022” will begin this month in Uttarakhand. Such training is conducted annually between the armies of the two countries with the aim of exchanging best practices, strategies and technologies. The previous exercise was held in Alaska, USA in October 2021.
  • Soldiers from the US Army's 11th Airlift Wing and the Assam Regiment of the Indian Army are participating in the exercise.
  • During this exercise, activities related to peacekeeping and peacekeeping will also take place. The joint exercise will also focus on humanitarian assistance and disaster relief operations.
  • Both countries will be trained in quick and coordinated implementation of relief operations during natural calamities.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel