இந்தியக் கடற்படையின் கப்பல் தயாரிப்பு நிறுவனமான ஜிஆர்எஸ்இ, ஒரே ஆண்டில் 3வது மிகப்பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்துள்ளது / Indian Navy's shipbuilder GRSE has designed the 3rd largest survey vessel in a single year
மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும், கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) நிறுவனம், இந்திய கடற்படைக்காக 3-வது மிகப்பெரிய ஆய்வுக்கப்பலை வடிவமைத்துள்ளது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு பிராந்திய இந்தியக் கடற்படையின் மனைவியர் நலச் சங்கத் தலைவர் திருமதி மதுமதி ஹம்பிஹோலி இந்த ஆய்வுக் கப்பலை தொடங்கிவைத்தார்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய இந்த ஆய்வுக்கப்பல், 110 மீட்டர் நீளமும், 16 மீட்டர் அகலமும் கொண்டது. சுமார் 3,400 டன் எடையிலான பொருட்களை எடுத்துச்செல்லும் திறன் கொண்டது.
இதன்மூலம், ஒரே ஆண்டில் 3-வது மிகப் பெரிய ஆய்வுக் கப்பலை வடிவமைத்து ஜிஆர்எஸ்இ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
இது இந்தியக் கடற்படையின் கடற்பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்த முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சரின் விருது ஜிஆர்எஸ்இ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments