Recent Post

6/recent/ticker-posts

435 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த தமிழ்நாடு அணி / TAMILNADU WINS BY 435 RUNS AGAINST ARUNACHALA PRADESAM

  • விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. 
  • முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சன், என்.ஜெகதீசன் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.
  • ஜெகதீசன் 141 பந்துகளில் 25 பவுண்டரி, 15 சிக்சர் உள்பட 277 ரன்களையும், சாய் சுதர்சன் 102 பந்துகளில் 19 பவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 154 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 406 ரன்களைக் குவித்தது. லிஸ்ட் ஏ போட்டிகளில் இதுதான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
  • இதையடுத்து, 507 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை துரத்திய அருணாச்சல பிரதேச அணி 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 435 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
  • உலக அளவில் ஒருநாள் போட்டியில் 435 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றிபெறுவது இதுதான் முதல் முறையாகும். இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்து தமிழக கிரிக்கெட் அணியின் வீரர் ஜெகதீசன் புதிய சாதனை படைத்துள்ளார்.
  • தமிழகம் எடுத்த 506 ரன், லிஸ்ட் ஏ தொடரில் ஒரு அணியி அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. இதற்கு முன் நெதர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து 498 ரன் குவித்து படைத்த சாதனை நேற்று தகர்க்கப்பட்டது.
  • விஜய் ஹசாரே தொடரில் கடந்த ஆண்டு மும்பை அணி புதுச்சேரிக்கு எதிராக 457 ரன் குவித்த சாதனையும் முறியடிக்கப்பட்டது. 
  • லிஸ்ட் ஏ ஆட்டத்தில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனை ஜெகதீசன் (277) வசமானது. முன்னதாக, 2002ல் கிளமார்கன் அணிக்கு எதிராக சர்ரே அணியின் அலிஸ்டர் பிரவுன் 268 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
  •  உலக அளவில் லிஸ்ட் ஏ ஒருநாள் ஆட்டத்தில் 435 ரன் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, சாமர்செட் அணி 1990ல் டெவோன் அணிக்கு எதிராக 346 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
  • விஜய் ஹசாரே தொடரின் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையும் ஜெகதீசன் வசமானது (15 சிக்சர்). இதற்கு முன் 2019-20 தொடரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 சிக்சர் விளாசி இருந்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel