Recent Post

6/recent/ticker-posts

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் நளினி, முருகன் உள்பட 6 பேரும் விடுதலை - உச்ச நீதிமன்ற தீர்ப்பு / Rajiv Gandhi murder case acquitted 6 convicts including Nalini, Murugan - Supreme Court Verdict

TAMIL
  • 1991 மே 21-ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, பேரறிவாளன் உள்பட 26 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 
  • இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது.
  • பின்னர், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் வேண்டுகோளை ஏற்று, நளினியின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து அப்போதைய ஆளுநர் உத்தரவிட்டார். 
  • அதேபோல, 2014-ல் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனை யாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இதற்கிடையில், தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், அஜய் ரஸ்தோகி, ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது ஷரத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து கடந்த மே 18-ம் தேதி தீர்ப்பளித்தது.
  • இதேபோல தங்களையும் விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 
  • இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ''கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்" என்று தீர்ப்பளித்தது.
Rajiv Gandhi was assassinated by a human bomb in Sriperumbudur on 21 May 1991. 26 people including Nalini and Perariwalan who were arrested in this case were sentenced to death. The Supreme Court, hearing the appeal filed against this, upheld the death sentence imposed on Chandan, Murugan, Nalini and Perarivalan and ordered that the death sentence of Jayakumar, Robert Pius and Ravichandran be reduced to life imprisonment. Later, accepting the request of the Cabinet headed by former Chief Minister Karunanidhi, the then Governor ordered that Nalini's death sentence be commuted to life imprisonment. Similarly, in 2014, the Supreme Court commuted the death sentence of Murugan, Chandan and Perarivalan to life imprisonment. Meanwhile, a bench of Supreme Court Justices Nageswara Rao, Ajay Rastogi and Hemant Gupta heard the petition filed by Perariwalan seeking his release and on May 18, using the exclusive power of the Supreme Court under Article 142 of the Constitution of India, Perariwalan was acquitted. Similarly, Nalini and Ravichandran filed an appeal in the Supreme Court seeking their release. A bench of Supreme Court Justices PR Kawai and PV Nagaratna heard the case. The bench comprising Justices PR Kavai and PV Nagaratna, who ruled in this case, said, "Nalini, Ravichandran, Chandan, Murugan, Robert Pius and Jayakumar, who have been in prison for more than 30 years, have used the exclusive powers of the Supreme Court. are set free".ENGLISH
  • Rajiv Gandhi was assassinated by a human bomb in Sriperumbudur on 21 May 1991. 26 people including Nalini and Perariwalan who were arrested in this case were sentenced to death.
  • The Supreme Court, hearing the appeal filed against this, upheld the death sentence imposed on Chandan, Murugan, Nalini and Perarivalan and ordered that the death sentence of Jayakumar, Robert Pius and Ravichandran be reduced to life imprisonment.
  • Later, accepting the request of the Cabinet headed by former Chief Minister Karunanidhi, the then Governor ordered that Nalini's death sentence be commuted to life imprisonment.
  • Similarly, in 2014, the Supreme Court commuted the death sentence of Murugan, Chandan and Perarivalan to life imprisonment.
  • Meanwhile, a bench of Supreme Court Justices Nageswara Rao, Ajay Rastogi and Hemant Gupta heard the petition filed by Perariwalan seeking his release and on May 18, using the exclusive power of the Supreme Court under Article 142 of the Constitution of India, Perariwalan was acquitted.
  • Similarly, Nalini and Ravichandran filed an appeal in the Supreme Court seeking their release.
  • A bench of Supreme Court Justices PR Kawai and PV Nagaratna heard the case.
  • The bench comprising Justices PR Kavai and PV Nagaratna, who ruled in this case, said, "Nalini, Ravichandran, Chandan, Murugan, Robert Pius and Jayakumar, who have been in prison for more than 30 years, have used the exclusive powers of the Supreme Court. are set free".

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel