Recent Post

6/recent/ticker-posts

ஜார்கண்டில் இடஒதுக்கீடு 77 சதவீதமாக அதிகரிப்பு / Reservation in Jharkhand increased to 77 percent

  • ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 019 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் இட ஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படும் என ஹேமந்த் சோரன் வாக்குறுதி அளித்தார். 
  • அதை நிறைவேற்றுவதற்கான மசோதாவுக்கு இம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, தற்போது இந்த மாநிலத்தில் 60 சதவீதமாக உள்ள இடஒதுக்கீட்டு அளவை 77 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 
  • இந்த மசோதாவின்படி, தலித்துகளுக்கான ஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 26 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகவும், மிகவும் பிற்பட்டோருக்கு 14 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. 
  • மேலும், இதர பிற்பட்டோருக்கு 12 சதவீதமும், பொருளாதார ரீதியாக நலிந்த உயர் பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

    Post a Comment

    0 Comments

    close

    Join THERVUPETTAGAM Telegram Channel

    Join Telegram Channel