Recent Post

6/recent/ticker-posts

இயற்கை எரிவாயுக் கட்டணம், அங்கீகாரம், ஒழுங்குமுறை திறன் விதிமுறை திருத்தம் / Amendment of Natural Gas Tariff, Authorization, Regulatory Capacity Regulations

  • இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பின் மேம்பாட்டை துரிதப்படுத்தவும், நாட்டில் இயற்கை எரிவாயு சந்தையின் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம்  அதன் மூன்று விதிமுறைகளான இயற்கை எரிவாயு குழாய் கட்டணம், அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை திறன் விதிமுறைகளில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.
  • இந்த திருத்தங்கள், 1 ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வரும், ஒருங்கிணைந்த கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு ஏதுவாக அமையும்.  ஒருங்கிணைந்த கட்டணத்தை அமல்படுத்துவது குறித்த சிக்கல்களுக்கு தீர்வு காண, தொழில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • ஒரே நாடு, ஒரே தொகுப்பு, ஒரே கட்டணம் என்ற தொலைநோக்கை அடைய, மலிவு விலையில் தொலைதூர பகுதிகளில் இயற்கை எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதே இந்த மாற்றங்களின் நோக்கமாகும்.
  • ஒருங்கிணைந்த கட்டணத்தை செயல்படுத்துவதை எளிமையாக்க, நிறுவன அளவிலான ஒருங்கிணைந்த இயற்கை எரிவாயு குழாய் கட்டணத்தை,  தேசிய அளவிலான ஒருங்கிணைந்த கட்டணத்திற்கு இணையாக இருக்கும் வகையில் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 
  • மேலும் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள நுகர்வோரின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாப்பதற்காக ஒருங்கிணைந்த கட்டண மண்டலங்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • கணக்கில் காட்டப்படாத எரிவாயுவை அனுமதிப்பது, தடை காலம், திறன் அதிகரிப்பு போன்ற பிற திருத்தங்களும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel