Recent Post

6/recent/ticker-posts

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் / AMMA FULL BODY CHECKUP PROGRAM

TAMIL
  • மிகக் குறைந்த கட்டணத்தில் "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்" முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்படும்  இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கென சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படும்.
  • பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்டறிய முழு உடல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இதற்கு தனியார் மருத்துவமனைகள் ரூ. 12000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. 
  • அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த முழு உடல் பரிசோதனை வசதிகள் இப்போது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன.
  • எனவே, முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்" தொடங்கப்படும். 
  • இதே போன்று, மகளிருக்கென தனியாக அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டமும் தொடங்கப்படும். இந்தப் பரிசோதனைக்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும்.
  • மாநிலத்திலுள்ள அனைத்து 385 வட்டார அளவிலான மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்தில் இரு நாள்கள், ரத்தம், சிறுநீர்ப் பரிசோதனைகள், சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, கண் பரிசோதனை போன்ற அனைத்து அடிப்படை பரிசோதனைகளும் கட்டணம் ஏதுமின்றி செய்து கொள்ள "அம்மா ஆரோக்கியத் திட்டம்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
அவசர ஊர்திகள்
  • விபத்துகளில் பயன்படுத்தப்படும் 108 அவசர கால ஊர்திகளின் எண்ணிக்கை 751-ஆக உயர்ந்துள்ளது. அவற்றில் முதல் கட்டமாக 50 பழைய ஊர்திகளுக்குப் பதிலாக புதிய ஊர்திகள் வழங்கப்படும். 
  • 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 8 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் இளம் சிசு பராமரிப்பு மையங்களுக்கு புதிய கருவிகள் வழங்கப்படும்.
  • தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற 281 ரத்த வங்கிகளும், 415 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் 12 புதிய ரத்த வங்கிகள், 10 ரத்த சேமிப்பு மையங்கள், 10 ரத்த சேமிப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
பச்சிளம் குழந்தைகள் மையம்
  • தாம்பரம், குடியாத்தம், திருத்தணி, ராஜபாளையம், விருத்தாசலம் மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை மையமும், ராஜபாளையத்தில் 20 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும் குழந்தைகள் பராமரிக்கும் "ஸ்டெப் டவுன்' வார்டும் அமைக்கப்படும். மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல 20 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வாகனங்கள் வாங்கப்படும்.
  • சர்க்கரை நோயாளிகள் மூன்று மாத சர்க்கரை சராசரி அளவைக் கண்டறிய நவீன கருவிகள், அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்பட 302 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். 
  • தமிழகத்தில் 39 புதிய வட்டங்களில் மருத்துவமனைகள் அல்லது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தாலுகா மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.
முடநீக்கியல் மையத்துக்கு நிதி
  • சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படும் முடநீக்கியல் சிகிச்சை மையத்துக்கு, சிறப்பு மருந்துகளுக்காக ரூ. 5 கோடி நிதி வழங்கப்படும்
பரிசோதனைகள்
  • முழு ரத்தப் பரிசோதனை
  • சிறுநீரகப் பரிசோதனை
  • ரத்த சர்க்கரை
  • ரத்தக் கொழுப்பு பரிசோதனை
  • கல்லீரல் செயல்பாடு பரிசோதனை
  • ஹெபடைடிஸ்- பி ரத்தப் பரிசோதனை
  • ரத்த வகை-ஆர்.எச். பரிசோதனை
  • நெஞ்சுச் சுருள் படம்
  • நெஞ்சு ஊடுகதிர் படம்
  • மிகையொலி பரிசோதனை
  • இதய மீள்ஒலி பரிசோதனை (எக்கோ)
  • தைராய்டு ரத்தப் பரிசோதனை
  • சிறப்பு சர்க்கரை நோய் பரிசோதனை (மூன்று மாத அளவு- எச்பிஏ1சி) ஆகியன செய்யப்படும்
அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை
  • முழு உடல் பரிசோதனையில் கூடுதலாக
  • கர்ப்பப் பை வாய் பரிசோதனை (பேப் ஸ்மியர்)
  • மார்பக எண்ணியல் ஊடு கதிர்ப்படப் பரிசோதனை
  • எலும்புத் திறனாய்வு பரிசோதனை
  • ரத்த வைட்டமின்-டி, கால்சியம், பாஸ்பரஸ்
  • பாரா தைராய்டு ஹார்மோன்
  • Under this scheme implemented at Chennai Government General Hospital as a pilot project of "Amma Whole Body Examination Scheme" at a very low cost, special examinations for daughters will be carried out.
  • Citizens undergo a full physical examination to determine their health. For this, private hospitals, they charge up to 12000. As the infrastructure of government hospitals has been strengthened, these full physical examination facilities are now available in all government hospitals.
  • Therefore, as a pilot project, “Mother Full Body Examination Program” will be started at Chennai Government General Hospital. Similarly, Amma Women's Special Full Body Check-up Program will be launched exclusively for girls. A very low fee will be charged for this test.
  • A new scheme called "Amma Arogya Yojana" will be implemented at all 385 district-level upgraded primary health centers in the state to conduct all basic tests like blood, urine tests, diabetes diagnosis, blood pressure, cholesterol level, eye test free of cost, two days a week.
Emergency vehicles
  • The number of 108 emergency vehicles used in accidents has increased to 751. In the first phase, 50 old vehicles will be replaced with new ones. 10 Government Medical College Hospitals and 8 District Head Hospitals will be provided with new equipment for the Child Care Centers.
  • There are 281 government approved blood banks and 415 blood storage centers functioning in Tamil Nadu. 12 new blood banks, 10 blood storage centers and 10 blood storage units will be established this year.
Pacchilam Children's Centre
  • An Intensive Care Center for Pacchilam children will be set up in Thambaram, Kudiatham, Tiruthani, Rajapalayam, Vridthachalam hospitals, and a 20-bed intensive care unit and a "step down" ward for children will be set up in Rajapalayam. Vehicles will be purchased for 20 medical college hospitals to take Pacchilam children home from the hospital.
  • Modern equipment to determine the three-month average blood sugar levels of diabetic patients will be provided to 302 government hospitals, including all district head hospitals. In 39 new circles in Tamil Nadu, hospitals or upgraded primary health centers will be upgraded as taluk hospitals.
Experiments
  • Complete blood count
  • Renal examination
  • blood sugar
  • Blood cholesterol test
  • Liver function test
  • Hepatitis-B blood test
  • Blood Type-RH Experiment
  • Chest roll image
  • Chest x-ray image
  • Ultrasound examination
  • Echocardiogram (Echo)
  • Thyroid blood test
  • A special diabetes screening (tri-monthly level-HPA1c) will be done
Amma Gynecological Special Full Body Examination
  • In addition to a full body examination
  • Cervical examination (Pap smear)
  • Mammography CT scan
  • Bone scan
  • Blood Vitamin-D, Calcium, Phosphorus
  • Parathyroid hormone

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel