Recent Post

6/recent/ticker-posts

சென்னை பஸ் ஆப் செயலியை சிறப்பாக செயல்படுத்திய மாநகர போக்குவரத்து கழகத்துக்கு விருது / AWARD FOR CHENNAI BUS APP

  • ஒன்றிய அரசின், வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கேரள மாநிலம், கொச்சியில் கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற 15வது இந்திய நகர்ப்புற இயக்க மாநாடு மற்றும் எக்ஸ்போ 2022- நடந்தது. 
  • இதில், கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற துறை இணை அமைச்சர் கௌசல் கிஷோர் ஆகியோர், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'சென்னை பஸ் ஆப்' என்ற செயலியை திறம்பட செயல்படுத்தியமைக்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 'சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்' என்ற விருது வழங்கப்பட்டது. 
  • முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கொச்சியில் நடைபெற்ற விழாவில், வழங்கப்பட்ட 'சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்' என்ற விருதினை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel