Recent Post

6/recent/ticker-posts

ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் / AYUSHMAAN BHARAT MEDICAL INSURANCE SCHEME

TAMIL
 • ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் (AB PM-JAY) என்பது இந்திய அரசின் தேசிய ஆரோக்கியக் கொள்கை யின் ஒரு பகுதி ஆக இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகும். 
 • இதன் நோக்கம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சையை இலவசமாக, பொருளாதார வசதியில் கீழடுக்கில் இருக்கும் 40% மக்களுக்கு, பலவீனமானவர்களுக்கு அளிப்பதாகும்.
 • இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய, அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் ஆகும். இதன் மூலம் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் மக்கள்தொகை ஆனது ஐக்கிய அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மொத்தக் கூட்டு மக்கள்தொகையினை விட அதிகம். இத்திட்டம் செப்டப்ம்பர் 2018 இல், இந்தியா அரசின் ஆரோக்ய மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகம் இன் உறுதுணையுடன் ஆரம்பிக்கப் பட்டது.
முக்கிய அம்சங்கள்
 • இம்மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 10.74 கோடி குடும்பங்கள் அல்லது தோராயமாக 50 கோடி இந்தியர்களுக்கு காப்பீடு அளிக்கிறது.
 • இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவச் சேவைகளுக்கான காப்பீடு வழங்கப்படுகிறது.
 • இத்திட்டம் கட்டணமில்லாத(cashless) மற்றும் படிவங்கள் ஏதும் இல்லாத (paperless ) சிகிச்சையை மருத்துவமனைகளில் தருகிறது.
 • 2011ஆம் ஆண்டின் சமூக-பொருளாதார வகுப்புவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (SECC 2011) இன் படி, குறிப்பிட்ட தொழில் செய்வோர், அடிப்படை வசதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளவர்களுக்கு இத்திட்டத்தின் பயணர்களுக்கான மின்னணு-அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
 • குடும்பத்திலுள்ளோர் எண்ணிக்கை, வயது பாலினம் ஆகிய எந்தக் கட்டுப்பாடும் இன்றி அனைவரும் இத்திட்டதில் சேர தகுதியுடையவர்கள்.
 • ஒருவருக்கு இத்திட்டத்தில் சேர்வதற்கு முன்னரே இருக்கும் நோய்களுக்கும் சிகிச்சை பெறலாம்.
 • மருத்துவமனையில் உள் நோயாளியாக 3 நாட்கள் வரையும் அதைத் தொடர்ந்து வெளியிலிருந்து 15 நாட்கள் வரையும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் உட்பட அனைத்து மருத்துவச் செலவுகளையும் இத்திட்டம் ஏற்கிறது.
 • இத்திட்டத்தில் இணைந்துள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து இத்திட்டத்தில் இணைந்துள்ள நாட்டின் எந்த மாநிலத்திலுமுள்ள வேறொரு மருத்துவமனைக்கு மாறிச் சென்று சிகிச்சையைத் தொடரவும் இத்திட்டதில் அனுமதியுள்ளது.
 • கொரோனா தீநுண்மி நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சையும் இத்திட்டதின் மூலம் அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
திட்டத்தின் பரவல்
 • 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் PM-JAY திட்டத்தை ஏற்று செய்லபடுத்துகின்றன. ஒடிஷா, மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் தில்லி யூனியன் பிரதேசம் மட்டும் இத்திட்டத்தைச் செயற்படுத்தவில்லை. 
 • மே 2020 வரை, 12 கோடி பேருக்கு மின்னணு பயணர் அட்டை வழங்கப்பட்டுள்ளதோடு 1 கோடி பேர் சிகிச்சையும் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மொத்த எண்ணிக்கை 22,000 ஆக உள்ளது.
 • Ayuzman Bharat Prime Minister Jan Arogya Yojana (AB PM-JAY) is a health insurance scheme that is part of the National Health Policy of the Government of India. Its aim is to provide free secondary and tertiary care to the 40% of the economically weaker section of the population.
 • The scheme is the world's largest fully government funded health insurance scheme. This makes the population covered by Medicare larger than the combined population of the United States, Mexico, and Canada. 
 • The scheme was launched in September 2018 with the support of the Ministry of Health and Family Welfare, Government of India.
Key features
 • This health insurance scheme covers 10.74 crore families or approximately 50 crore Indians.
 • The scheme provides cover for medical services up to Rs 5 lakh per family per year through government and private hospitals mentioned in the scheme.
 • This scheme provides cashless and paperless treatment in hospitals.
 • According to the Socio-Economic Class Census 2011 (SECC 2011), the e-identity card for passengers of the scheme has been issued to those doing certain occupations and identified as fundamentally deprived.
 • Everyone is eligible to join this scheme irrespective of family size, age and gender.
 • One can also get treatment for pre-existing diseases before joining the scheme.
 • The scheme covers all medical expenses including tests and medicines for up to 3 days as an inpatient in the hospital followed by 15 days as an outpatient.
 • The scheme also allows transfer of treatment from one participating hospital to another hospital in any participating state of the country.
 • The central government has decided to provide testing and treatment for corona virus through this scheme.
Spread of the project
 • 25 States and Union Territories have adopted the PM-JAY scheme. Odisha, West Bengal, Telangana and Union Territory of Delhi are the only states that have not implemented the scheme. 
 • As of May 2020, 12 crore people have been issued e-Traveler Cards and 1 crore people have been treated. The total number of government and private hospitals providing treatment under this scheme is 22,000.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel