Recent Post

6/recent/ticker-posts

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் - ஆஸி., பார்லி ஒப்புதல்

  • இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்திற்கு ஆஸி., பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இது தொடர்பாக ஆஸி., பிரதமர் அந்தோணி அல்பனீசும், இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளார்.
  • அதேபோல், பிரிட்டனுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கும் ஆஸி., பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கி உள்ளது.
  • நேற்று ஆஸி., பிரதிநிதிகள் சபையில் எளிதாக நிறைவேறியது. இன்று செனட் சபையில் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளது.
  • எனினும் இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய பார்லிமென்டிலும், பிரிட்டன் பார்லிமென்டிலும் இன்னும் ஒப்புதல் பெறப்படவில்லை.
  • ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ஆஸி., இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆஸி., பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 
  • இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் காரணமாக, நமது வர்த்தக உறவுகளின் முழுத்திறனை வெளிக்கொண்டு வரவும், பொருளாதார வளர்ச்சியை தூண்டவும் இது உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
  • இந்தியா ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 2ம் தேதி கையெழுத்தானது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel