பருவநிலை மாநாடு வளரும் நாடுகளுக்கு நிதியுதவி - ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் / Climate Convention Funding for Developing Countries - European Union Endorsement
பருவநிலை மாற்றத்தால் வளரும் நாடுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்வதற்காக, அந்த நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க எகிப்தில் நடைபெற்று வரும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ஐரோப்பிய யூனியன் ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து நடைபெற்ற தீவிர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனின் அரசியல் மற்றும் நிதி விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவா் ஃபிரன்ஸ் டிம்மா்மன்ஸ் பருவநிலை மாற்றம் காரணமாக தோன்றும் இயற்கைப் பேரிடா்களால் தங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளை ஈடு செய்வதற்காக, வளா்ச்சியடைந்த நாடுகள் தங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று ஜி77 நாடுகள் (வளரும் நாடுகளின் கூட்டமைப்பு) வலியுறுத்தி வருகின்றன.
இதுவரை அத்தகைய நிதியை உருவாக்குவதில் நாங்கள் தயக்கம் காட்டி வந்தோம். ஏற்கெனவே இதுபோன்ற இயற்கைப் பேரிடா்களில் நிவாரணம் அளிப்பதற்கான நிதியுதவிக் கட்டமைப்பு உள்ளது.
0 Comments