Recent Post

6/recent/ticker-posts

குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருது (ஐசிஎஃப்பி) / ICFPB AWARD 2022

TAMIL
  • நவீன குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை அமல்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும், அதற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விருதை இந்தியா வென்றுள்ளது. 
  • குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருது 2022 என்ற இந்த விருதை தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் (ஐசிஎஃப்பி) இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. 
  • நாடுகள் பிரிவில் இந்த விருதை பெற்ற ஒரே நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
  • நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் திருமணமான பெண்களின் விகிதம் 2015-16-ஆம் ஆண்டில் 66 சதவீதமாக இருந்தது. 2019-21 ஆண்டில் அது 76 சதவீதமாக அதிகரித்தது.  
  • உலகளவில் 2030-ஆம் ஆண்டில் இந்த சதவிகிதம் 75-ஆக இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியா ஏற்கனவே அந்த இலக்கை எட்டியுள்ளது. 
  • பரிவார் விகாஸ் எனும் முன்னோடி திட்டம் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி இதில் முன்னேற்றங்களை அடைய வழிவகுத்துள்ளது.
  • ஐசிஎஃப்பி என்ற குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரடியாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணொலி  வாயிலாகவும் பங்கேற்றனர்.
ENGLISH
  • India won the Family Planning Award in recognition of its significant progress and recognition of India's efforts to implement modern family planning methods.
  • The Award for Outstanding Leadership in Family Planning Implementation 2022 was presented to India at the International Conference on Family Planning (ICFP) held in Pattaya, Thailand.
  • It is noteworthy that India is the only country to have received this award in the country category.
  • The proportion of married women practicing family planning in the country was 66 per cent in 2015-16. It increased to 76 percent in 2019-21.
  • With the global target of 75 percent by 2030, India has already achieved that target.
  • A pioneering program called Parivar Vikas has created awareness and led to improvements in family planning.
  • More than 3,500 delegates from more than 120 countries participated in the ICFP International Conference on Family Planning in person and more than 10,000 participated via video.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel